Dengue Fever : மக்களே உஷார் ! தீவிரமாய் பரவும் டெங்கு காய்ச்சல் - அமைச்சர் கொடுத்த வார்னிங்..!
தினமும் 500 முதல் 600 பேர் வரை டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று 252 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது - மா.சுப்ரமணியன்
டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை, நகராட்சித் துறையை சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றார்.
மா. சுப்பிரமணியன் பேட்டி
மாநில அளவில் மழை கால தொற்று நோய்கள் டெங்கு போன்ற நோய்களை தடுக்க மாநில அளவிலான டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை முதல் துறைகள் ஒருங்கிணைப்பு அந்தந்த சுகாதார மாவட்டங்களிலும் 11 துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்றிணைத்து பணி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை 11,538 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு வருவதில்லை அதனால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. தினமும் 500 முதல் 600 பேர் வரை டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று 252 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.
நீட்டும் வேண்டாம், நெக்ஸ்டும் வேண்டாம் என்பது தான் தமிழ்நாட்டின் கொள்கை
பொது சுகாதாரத் துறை மூலமாக ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளுக்கு நெறிமுறைகள் வழங்கி இருக்கிறோம் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை இறுதிக்கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி பெறுபவர்கள் குறித்த தகவல் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மருத்துவ பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படும் இடங்களில் தேவையான ஆட்கள் போட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய மா.சுப்ரமணியன் ;
"தமிழ்நாட்டில் 11,538 பேருக்கு இந்த ஆண்டில் இதுவரை டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்றாலும் உயிரிழப்பை குறைக்க முடிந்ததற்கு துறையின் நடவடிக்கைகளே காரணம். நான் எப்போதுமே நோய் பாதிப்புகளின் போது எண்ணிக்கையை ஒருபோதும் குறைத்துக் காட்டக் கூடாது என்று அதிகாரிகளிடம் வலியுறுத்துவேன். அப்போது தான் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். எண்ணிக்கை அதிகம் என்றால் ஒருவரையும் விட்டுவிடாமல் கண்காணித்து சிகிச்சையளிக்கிறோம் என்று பொருள்.
கடந்த ஆட்சியில் நடந்த காலரா மரணங்களை கார்டியாக் அரெஸ்ட் என்று கணக்கு காட்டினார்கள். நான் கண்டித்து அறிக்கை கொடுத்தேன். காலரா இறப்புகளை காலரா இறப்புகள் என்று சொன்னால் தானே மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். நோய் புள்ளி விவரங்களை எப்போதும் மறைக்கக் கூடாது. மறைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஆண்டில் இன்னும் மாதங்கள் உள்ளன. ஏற்கனவே ஏற்பட்ட 4 இறப்புகளுடன் இதற்கு மேல் டெங்கு இறப்புகள் ஒன்று கூட ஏற்படாமல் தடுக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனையில் தெரிந்தோ தெரியாமலோ டெங்கு நோயாளிகள் இருந்தால் அவர்களையும் கண்காணிப்பது , வீடு வீடாக சென்று டெங்கு கொசுவிற்கான Source இருந்தால் கண்டறிந்து அழிப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். மக்களும் கொசு கடியில் இருந்து பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )