Rheumatoid Arthritis | முடக்கு வாதம் எனும் ருமட்டாய்டு ஆர்தரைட்டிஸ் வராமல் தடுக்கமுடியுமா?
குடலில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் மூலம், இந்த ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் வராமல் தடுக்கமுடியும். ஆரோக்கியமான சத்துள்ள உணவுகள் மூலம், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரும்.
குடலில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் மூலம், இந்த ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் வராமல் தடுக்க முடியும். ஆரோக்கியமான சத்துள்ள உணவுகள் மூலம், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரும். ரூமட்டாய்டு ஆர்தரைடிஸ் என்பது ஒரு ஆட்டோஇம்யூன் ( AUTOIMMUNE ) குறைபாடு. அதாவது, உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், உடலில் இருக்கும் செல்களை தாக்கி அழிக்கும் . இது முதலில் மூட்டுகளை பாதிக்கிறது. இந்த AUTOIMMUNE நோய் உடலில் எந்த பாகத்தை வேண்டுமானாலும், தாக்கலாம். அதற்கு பெயர் வேறுபடும். எலும்புகளை தாக்கினால் அதற்கு முடக்கு வாதம் அல்லது ரூமட்டாய்டு ஆர்தரைட்டிஸ் (Rheumatoid arthritis- RA) என அழைக்கப்படும்.
இது எந்த காரணத்தினால் வருகிறது என குறிப்பிட்டு சொல்ல முடிவதில்லை. வாழ்வியல் முறை , மரபணு காரணமாக வரும். இது முடிந்த வரை வராமல் தடுக்க முடியும். மரபணு காரணமாக வந்தால், வராமல் தடுக்க முடியாது, இது 2-3% மட்டுமே மரபணு காரணத்தினால் வரும்.
இது வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன ?
- மூட்டுகளில் வலி, வீக்கம், நிறம் மாறுதல், மூட்டுகளை மடக்கி நீட்டுவதில் சிரமம், என ஏதேனும் பிரச்சனைகள் நீண்ட காலம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்னை என கண்டறிய வேண்டும். விரைவில் நோயை கண்டறிவதே நோயில் இருந்து தற்காத்து கொள்ள முதல் வழி.
- வாழ்வியல் முறைகள் மாற்ற வேண்டும். முதலில் தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எளிமையான நடை பயிற்சி, ஜாகிங், உடலை தளர்வாக வைக்க ரிலாக்சாஷன் பயிற்சி, மூட்டுகளை வலுப்படுத்த பிசியோதெரபி பயிற்சிகள், மனதை ரிலாக்ஸாக வைக்க தியான பயிற்சி, ஸ்ட்ரெஸ் குறைக்க மூச்சு பயிற்சி, யோகா போன்றவரை தினம் செய்ய வேண்டும்.
- உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, வைட்டமின் சி சத்துள்ள உணவுகளா ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், உணவுகளான, இஞ்சி, காய்கள், கீரைகள், உளர் பழங்கள் ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகி, வெந்தயம், பால் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.
- காற்று மாசுபாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும். காற்று மாசு ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் அதிகப்படும் ஒரு காரணியாக இருக்கும். மேலும் புகைபிடித்தல், புகை பிடிப்பவர்களுக்கு அருகி இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- ப்ரீபையோட்டிக்ஸ் மற்றும் ப்ரோ பையோட்டிக்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரும். இதனால் தயிர், பால், பழையசாதம் ராகி கூழ் போன்றவை ப்ரோ பையோட்டிக்ஸ் நிறைந்த உணவுகள். சீசனில் கிடைக்கும் அணைத்து உணவுகளும் ப்ரீபையோட்டிக்ஸ் நிறைந்த உணவுகளாகும். இது போன்ற உணவில் மாறுபாடு கொண்டு வருவதன் மூலம். முடக்கு வாதம் வராமல் தடுக்கலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )