மேலும் அறிய

Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!

மார்பகப் புற்றுநோய்: பெண்கள் சுய பரிசோதனை மூலம் ஆரம்பத்திலேயே கண்டறியலாம் | எளிய வழிமுறைகள் & முக்கிய குறிப்புகள்!

மார்பகப் புற்று நோயைக் கண்டறிய, பெண்களே சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த செய்முறை விளக்கத்தை கிழே காணலாம். இதுகுறித்து பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

சுய மார்பகப் பரிசோதனை

இருபது வயதைக் கடந்த அனைத்து மகளிரும் மாதம் ஒருமுறை தங்களின் மாதவிடாய் காலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பின்வரும் சுய மார்பகப் பரிசோதனையை கட்டாயம் செய்யவும்.

முதல் படி - பாருங்கள்

முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களின் இருபக்க தோள்பட்டைகளையும் நேராக வைத்துக் கொண்டு கைகளை கீழே தொங்க விட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது தங்களின் இருபக்க மார்பகங்களிலும் அளவிலோ வடிவத்திலோ நிறத்திலோ ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்களா?

ஏதேனும் வீக்கத்தைக் காண்கிறீர்களா?  இப்போது உங்களின் இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மேற்கூறியவற்றைப் பார்க்கவும்.

இரண்டாவது படி - உணர்தல்

தங்களின் தோள்பட்டைப் பகுதிக்குக் கீழ் தலையணையை வைத்துப் படுத்துக் கொண்டு, தங்களின் இடது கையை வைத்து வலது புற மார்பகத்தையும்

வலது கையை வைத்து இடது புற மார்பகத்தையும் தொட்டு உணர்ந்து பாருங்கள்.

மூன்றாவது படி – பரிசோதித்தல்

உங்களின் நடு மூன்று விரல்களின் உள்ளங்கைப் பகுதியைக் கொண்டு அங்குலம் அங்குலமாக தங்களின் மார்பகங்களை அழுத்திப் பரிசோதனை செய்யுங்கள்.

தங்களின் மூன்று விரல்களையும் தட்டையாக சேர்த்து வைத்துக் கொண்டு சீரான அழுத்தத்தைக் கொடுத்து இந்த பரிசோதனையைச் செய்யுங்கள்.

சிறிய சிறிய வட்ட வடிவில் தங்களின் விரல்களை வைத்து அழுத்திப் பார்க்க வேண்டும். இவ்வாறு தங்களின் மார்பகம் முழுமையையும் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை வட்ட வடிவில் அழுத்தம் தருவதற்கு இடையிலும் விரல்களை எடுக்காமல் தொடர்ந்து பரிசோதனை செய்யவும். வெளிப்புறத்தில் இருந்து சுற்றுப் பகுதிகளை பரிசோதனை செய்து கொண்டே உட்பக்கம் வந்து இறுதியில் முலைக் காம்பு வரை அழுத்தம் தந்த பரிசோதனை செய்திருப்பதை உறுதி செய்யவும்.

இந்தப் பரிசோதனையில் ஏதேனும் வீக்கம், கட்டி இருப்பது போன்ற உணர்வு, தோல் பகுதி ஆரஞ்சுப் பழ தோல் போன்று தடிமனாக இருத்தல் போன்றவற்றை பரிசோதிக்கவும்.

அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் கக்கம் (Arm pit) பகுதியை அழுத்தி அங்கு ஏதேனும் கழலை வீக்கம் இருக்கின்றதா? என்பதை பரிசோதிக்கவும்.


Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!

நான்காவது படி - உணர்தல்

தங்களது முலைக்காம்பை மெதுவாகப் பிதுக்கிப் பார்க்க வேண்டும்.

முலைக் காம்பில் இருந்து  நீர் போன்ற , பால் நிற அல்லது மஞ்சள் நிற திரவமோ அல்லது ரத்தமோ வெளியேறுகிறதா என்பதைப் பார்க்கவும்.

ரத்தம் வெளியேறுவது புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

ஐந்தாவது படி - பார்த்தல் & உணர்தல்

மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் மற்றொரு மார்பகத்திலும் செய்ய வேண்டும். ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் உடனே தங்களின் மருத்துவரை நாட வேண்டும்.

இந்தப் பரிசோதனையை மாதம் ஒரு முறை செய்வதன் மூலம் தங்கள் மார்பகங்களில் நேரும் மாற்றங்களை உடனே இனங்கண்டு மருத்துவ உதவியை நாட முடியும்.

முப்பது வயதைக் கடந்தோர் வருடம் ஒருமுறையேனும் மருத்துவரிடம் நேரடி மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

விரைவான நோய் கண்டறிதல் மூலம் துரிதமான சிகிச்சை அளித்து முழுமையான நோய் குணம் பெற முடியும் என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Heart Attack: 60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget