‛பிரியாணி சாப்பிடுறவனை சுட்டா என்ன தப்பு?’ - கொதித்த சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்!
Chef Venkatesh Bhat Angry: ‛பிரியாணி உடலுக்கு கேடு தரும் உணவு என பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
இன்று பலரின் பிடித்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது. தூக்கலான மசாலா, பூ போல அரிசி, தேவைக்கேற்ப இறைச்சி என மக்கள் பிரியாணி ஒவ்வொரு நாளும் ஆராதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த உணவின் சேர்க்கப்படும் ஒவ்வொன்றும் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது எனக் கூறுகிறார் பிரபல சமையல் கலைஞரான வெங்கடேஷ் பட்.
Behindwoods தளத்திற்கு பிரியாணி பற்றி பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் கூறியதாவது, “ பிரியாணியில் அதிக கொழுப்பு, அதிக மசாலா, அதிக எண்ணெய் இருக்கிறது. கொஞ்சமாவது உணவில் சாத்வீகம் இருக்கணும். ஏதோ வாரத்துல ஒரு நாள், மாசத்துல 2 நாள் எனக்கு பிடிச்சுருக்கு.. அதனால அந்த உணவை நான் சாப்புடுறேன் அப்படினா பராவாயில்லை. அதையே நான் வாரத்துக்கு இரண்டு மூணு தடவை, வேற வேற பொழுதுல சாப்பிட்டுக்கிட்டு,அதை ஒரு எமோஷன் சொல்லிட்டு இருக்காங்க..
பிரியாணியை ரொம்ப பிரபலபடுத்திட்டாங்க.. அதுல என்ன இருக்கு அரிசில மசாலா, இறைச்சியை போட்டு சமைக்கிற விஷயம் அது. அது இறைச்சி இருக்குற சாம்பார் சாதம் அவ்வளவுதான். அந்த உணவை ரொம்ப பிரபலப்படுத்தி, அது இல்லாம வாழ முடியாது அப்படிங்கிற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க. அதுதான் சாப்பாடுங்கிற மாதிரி ஆயிடுச்சு.
அதுல போடுற நெய், டால்டா, மசாலா எல்லாமே பயங்கமான கேடு. அது வெஜிடபுள் பிரியாணியா இருந்தாலும் சரிதான். அதனால எமோஷன உணவுல கொண்டு வராதீங்க. சாப்பாடுல சாத்வீகத்தை கொண்டு வாங்க.. சாத்வீகம் - னா என்ன மசாலா, உப்பு, எண்ணெய் எல்லாத்தையும் கொஞ்சம் கம்மியா எடுத்துக்குறதுதான்.
எப்பயோ ஒரு தடவை சாப்பிட வேண்டிய சாப்பாட தினமும் சாப்பிட்டுட்டு, தினமும் சாப்பிட வேண்டியதை எப்பயோ ஒரு தடவை சாப்பிட வேண்டிய நிலைமைக்கு வந்துட்டோம். மாசத்துக்கு 90 வேளை. இதுல 85 வேளை சாத்வீகமா சாப்ட்டுட்டு ஏதோ 5 வேளை நமக்கு பிடிச்ச மாதிரி சாப்பிட்டா பராவாயில்லை.. ஆனா 85 தடவை பிரியாணிய சாப்பிட்டுட்டு எனக்கு வியாதி வருதுனு சொன்னா அவன சுடணுமா வேணாமா? , என்று அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )