ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து... முக அழகுக்காக இப்படி ஒரு ட்ரீட்மெண்ட் செய்த ஜூலி.!
Vampire Facial: வாம்பயர் ஃபேஷியல் என்பது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்திற்கு புத்துயிர் தரும் முறையாகும்.
Vampire Facial Treatment: பிக் பாஸ் ஜூலியின் அழகின் ரகசியம் என்ன... போட்டு உடைத்த ஜூலி
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மிகவும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது. அவரின் பெயர் பிக் பாஸ் சீசனில் அதிகமாக டேமேஜ் அனாலும் மிகவும் பிரபலமாகவும் ஆனார். ஜூலிக்கும் நடிகை ஓவியாவிற்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள், வாக்குவாதங்கள், சர்ச்சைகள் மக்களை பெரிதும் கவர்ந்தது.
பிக் பாஸ் சீசன் 1ற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். அதனை தொடர்ந்து சினிமா மற்றும் மாடலிங் துறையில் தலைகாட்டி வந்தவர் திரைப்படங்களில் சில சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் ஜூலி முக அழகிற்கான ஒரு சிகிச்சை முறை பற்றி தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பதிவிட்டு இருந்தார். வாம்பயர் ஃபேஷியல் பற்றின அழகு சிகிச்சை முறை பற்றியும் அவரின் சருமத்தின் ரகசியம் குறித்தும் கூறுகையில் வாம்பயர் ஃபேஷியல்தான் அதற்கு காரணம் என்று தனது அழகின் ரகசியத்தை பற்றி கூறியுள்ளார்
வாம்பயர் ஃபேஷியல் என்பது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்திற்கு புத்துயிர் தரும் முறையாகும். இந்த சிகிச்சையின் மூலம் முகத்தில் உள்ள வடுக்கள், முகப்பரு தழும்புகள், கோடுகள், பெரிய துளைகள் அவற்றை சரி செய்து சருமத்தின் பளபளப்பையும், நேர்த்தியையும் மேம்படுத்துகிறது.
வாம்பயர் ஃபேஷியல் சிகிச்சை செய்முறையில் உடலில் இருந்து சிறிய அளவு இரத்தத்தை நரம்பு வழியாக எடுத்து அதில் இருக்கும் பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மாவை பிரிக்கிறார்கள். நுண்ணிய ஊசிகளைப் பயன்படுத்திதோலில் துளையிட்டு மைக்ரோ-நீட்லிங் செயல்பாடு மூலம் பிஆர்பி செறிவு செலுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சை முறை மூலம் சருமத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுப்பதோடு பல நன்மைகளையும் செய்கிறது. இந்த வாம்பயர் ஃபேஷியல் சிகிச்சையை முறையான சரும நிபுணர்களின் ஆலோசனையின் படியும் ஸ்கின் கிளினிக்கின் முறையான வழிகாட்டுதலின் மூலமும் மேற்கொள்ள வேண்டும். மைக்ரோ-நீட்லிங் செயல்முறை ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடலாம். ஒவ்வொருவருக்கும் நுண்ணிய ஊசியின் வீதம் மற்றும் ஆழம் மாறுபடும். எனவே சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னர் சிகிச்சையின் செயல்முறை பற்றி கேட்டறிவது நல்லது. அப்போது தான் அதிக பட்ச நன்மைகளை பெற முடியும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )