Cholesterol: எச்சரிக்கை மக்களே.. அதிக கொழுப்பு.. உங்கள் கால்களில் இந்த அறிகுறிகள் உள்ளதா?
உடலில் அதிகப்படியான கொழுப்பு படிந்திருந்தால் கால்களில் பல்வேறு அறிகுறிகள் தென்படும். அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க கொழுப்புத் தேவையானதுதான். உடலில் ஹார்மோன்கள், திசு அடுக்குகள் மற்றும் வைட்டமின் டி தக்கவைப்பு உள்ளிட்ட பலவற்றிற்கு கொழுப்பு மிகவும் அவசியமானது. கொழுப்பு நீரில் கரையக்கூடியது அல்ல. அதனால், Lipoproteins இரத்தம் வழியே நீந்தி உடலின் மற்ற உள்ளுறுப்புகளுக்கு செல்ல பயன்படுகிறது. இதில் இரண்டு வகை இருக்கிறது. அவை LDL (Low-density Lipoproteins) மற்றும் HDL (high-density Lipoproteins). குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (Low-density Lipoproteins) - இவைதான் கெட்ட கொழுப்பு. அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (High-density Lipoproteins) - இவைதான் நல்ல கொழுப்பாக கருதப்படுகிறது.
உடலில் கெட்ட கொழுப்பு சேர பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக எண்ணெயில் பொரித்த உணவு சாப்பிடுவது, போதிய உடல் பயிற்சி இல்லாதது, உடல் பருமன், புகைப்பிடித்தல், வாழ்வியல் முறைகள் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உடலில் அதிக அளவு கெட்ட கொழுப்பு இருந்தால் அது நம் கால்களில் அறிகுறிகளாக வெளிப்படும். அறிகுறிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிகப்படியான கால்வலி:
உடலில் அதிகப்படியான கொழுப்பு இருந்தால் peripheral artery disease எனப்படும் நிலை உருவாகும். அதாவது கால்களில் இருக்கும் ரத்த நாளங்களில் கொழுப்பு சேரும் காரணத்தால் கால் வலி, கால் மரத்துப்போவது, உடற் பயிற்சியின்போது கால்களில் வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.
பலவீனம் அல்லது சோர்வு:
அதிக கொழுப்பு இருந்தால் கால்களில் ரத்த ஓட்டம் குறையும் என கூறப்படும் நிலையில், கால்கள் பலவீனமாகவும் அதிக சோர்வுடனும் காணப்படும்.
கால் கூச்சம் / மரத்துப்போவது:
உடலில் அதிக கொழுப்பு இருந்தால் நிச்சயம் கால்களில் கூச்சம், மரத்துப்போவது ஆகிய அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகளை லேசாக நினைத்துக்கொள்ளாமல் கவனித்து பார்க்க வேண்டும்.
பாதங்கள் குளிர்ச்சியாகவே இருப்பது:
கால் ரத்த நாளங்களில் கொழுப்பு போய் படிந்துக் கொள்வதால், ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் வெப்பநிலை அதிகமாக இருக்கும் சூழலிலும் பாதங்கள் குளிர்ச்சியாகவே இருக்கும். இது ஒரு முக்கிய அறிகுறியாகும்.
கால் ரோமங்கள் குறைவது:
ரத்த ஓட்டம் குறையும் நிலையில், கால்களில் இருக்கும் ரோமங்கள் உதிரத் தொடங்கும் அல்லது ரோமங்களின் வளர்ச்சி குறையத் தொடங்கும். குறிப்பாக ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்த பகுதியில் இது தென்படும்.
தோலில் ஏற்படும் மாற்றங்கள்:
கால்களில் கொழுப்பு படிந்திருந்தால் காலில் இருக்கும் தோல் இறுக்கமாக மாறக்கூடும்.
கால் புண்:
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் தொடர்பான ரத்த நாளம் சுருங்குவதால் கால் புண்கள் ஏற்படும். காலில் புண்கள் இருப்பது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதைக் குறிக்கும். கடுமையான ரத்த நாள அடைப்புகளின் காரணமாக திசுக்களில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறையும். மேலும், இது peripheral artery disease இன் முற்றிய நிலைகளில் நடக்கும். இது போன்ற சூழலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காலை அகற்றும் நிலை கூட ஏற்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )