சின்னஞ்சிறு காளானில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள்! என்னென்னவென்று தெரியுமா?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பார்கள். ஆனால் அப்படி உடனே முளைத்த காளானில் தான் அத்தனை அத்தனை மருத்துவக் குணங்கள் குவிந்து கிடக்கின்றன.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பார்கள். ஆனால் அப்படி உடனே முளைத்த காளானில் தான் அத்தனை அத்தனை மருத்துவக் குணங்கள் குவிந்து கிடக்கின்றன.
1. இளமையான தோற்றம் பெற வேண்டுமா?
காளானில் இரண்டு ஆண்டி ஆக்ஸிடன்ஸ் உள்ளன. ஒன்று எக்ரோதியோனைன் மற்றொன்று க்ளுட்டோதியோன். இந்த இரண்டும் இரு சேர இருப்பதால் அவை உடல் அழுத்தத்திற்கு உள்ளாகுவதைக் குறைத்து இளமையான தோற்றப் பொலிவைத் தருகிறது.
2. மூளையைக் காக்கும் காளான்
இளைமையைத் தக்க வைக்க என்னதான் தங்கப்பஷ்பமே சாப்பிட்டாலும் கூட நம்மை வயது ஆட்கொள்ளாமல் இருக்காது தானே. வயது ஆகும் போது மூளையின் செயல்திறனும் மங்கத் தொடங்கும். அப்போது சிலருக்கு பார்க்கின்சன்ஸ், அல்சைமர்ஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். காளானில் உள்ள க்ளுடாதியோன் இந்த நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும். ஆகையால் நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள் அன்றாடம் 5 பட்டன் மஷ்ரூம் எனப்படும் சிறு காளானாவது சாப்பிடுவது நல்லது. இதை மைக்ரோவேவ் செய்தோ க்ரில் செய்தோ சாப்பிடலாம்.
3. காளான் உங்களின் மனநிலையை சீராக வைக்கும்
காளான் சாப்பிடுவதா மூட் ஸ்விங்ஸ் கூட சரியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25000 பேரிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் அடிக்கடி உணவில் காளான் சேர்த்துக் கொள்வோருக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கும் காளானில் உள்ள எர்கோதியோனைன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. பட்டன் காளானில் உள்ள பொட்டாசியம் ஆன்க்ஸைட்டி எனும் மனப் பதற்றத்தை நீக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
4. நினைவாற்றலைப் பெருக்கும்
மாணாக்கர் காளானை தவறாமல் உட்கொள்ளலாம். வெண்டைக்காய் சாப்பிட்டால் கணிதம் நன்றாக வரும் என்பார்கள். ஆனால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஓர் ஆராய்ச்சியில் வாரத்தில் முக்கால் கப் அளவிற்கு சமைக்கப்பட்ட காளானை சாப்பிடுவதால் அவர்களுக்கு நினைவாற்றலைப் பெருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
5. இதயம் காக்கும் குட்டிக் காளான்
மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதுபோல் குட்டிக் காளானில் மூளையைக் காக்கும் திறன் மட்டுமல்ல இதயம் காக்கும் திறனும் இருக்கிறது என ஆய்வு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காளானின் குடையில் வெறும் 5 மில்லிகிராம் சோடியம் மட்டுமே உள்ளது. காளான் சுவையில் இறைச்சிக்கு ஒரு மாற்றாக இருக்கும். அதனால் இதை உட்கொள்வதன் மூலம் கலோரிக்கள், கொழுப்பு, கட்டுப்பாட்டில் இருக்கும்.
6. எலும்பை காப்பாற்றும் காளான்
காளானை வாங்கும்போது அந்த பாக்கெட்டின் மீது யுவிபி என எழுதியிருக்கிறதா எனப் பாருங்கள். யுவி ஒளியில் வளர்க்கப்படும் காளானில் வைட்டமின் டி நிறைந்ததாக இருக்கும். யுவிபி எக்ஸ்போஸ்டு காளானை நீங்கள் அன்றாடம் மூன்று அவுன்ஸ் என்றளவில் சாப்பிட்டால் போதும் அன்றாடம் தேவைப்படும் வைட்டமின் டி சத்து கிடைத்துவிடும்.
7. சக்தி தரும் காளான்
காளானின் ரைபோபிளேவின், ஃபோலேட், தயமின், பான்டோதெனிக் அமிலம், நியாசின் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு நிறைவான ஊட்டச்சத்தைத் தந்து சிவப்பு அணுக்கள் உருவாக வழிவகுக்கிறது.
இவை தவிர இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்தான ஆலிகோசேக்கரைட் உங்கள் குடல்பகுதிகளில் ப்ரீபையோட்டிக்காக செயல்பட்டு உங்கள் பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்களை பரவ விடுகிறது. இதன் மூலமாக உங்களது ஜீரண சக்தியும் , குடல் செயல்பாடும் ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
காளானில் காணப்படும் லினோலெய்க் புற்றுநோய் எதிர்ப்பு கூறுகளாக செயல்பட்டு, உங்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றலாம். குறிப்பாக மார்பக புற்றுநோயிலிருந்து காளான் அதிகமாக காப்பாற்றும்.
எனவே, கொழுப்பு சத்தற்ற சோடியம் மற்றும் கலோரிகள், ஏராளமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள்,மினரல்கள் காளானை நம் உணவில் வழக்கப்படுத்திக் கொள்வோம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )