(Source: ECI/ABP News/ABP Majha)
Period Intimacy Myths : பீரியட்ஸ் நாட்களில் உடலுறவு ஓகேவா? இந்த 6 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!!
மாதவிடாய் காலங்களில் உடலுறவு கொள்ளலாமா. இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
மாதவிடாய் காலங்களில் உடலுறவு கொள்ளலாமா. இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ் சமூகத்தில் பெண்களின் மாதவிடாய் நிமித்தமாகவே பல்வேறு புரிதல் குறைபாடுகளும் பொதுவெளியில் இருப்பதால், முதலில் அதை களைய வேண்டியதே முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் படித்து பண்பட்ட சிலருக்கு மாதவிடாய் காலங்களில் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை.
அத்தகையோருக்காக இந்த 6 டிப்ஸ்.
பீரியட் செக்ஸால் கர்ப்பம் நிகழாதா?
மாதவிடாய் காலத்தில் உறவு கொண்டால் கர்ப்பம் தரிப்பு நிகழாது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. அது பல நேரங்களில் அப்படியே நடந்தாலும் கூட, அந்த நேரத்தில் நடக்கும் உறவின் போதும் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து K-Y’s sex therapist நிறுவனத்தின் மருத்துவர் ஷேனோன் சாவேஸ் கூறியிருப்பதை கவனிப்போம். ஒரு ஆணின் விந்தணு பெண்ணிக் கர்ப்பப் பையில் 5 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். ஆதலால், பெண்னின் ஓவுலேஷன் எனப்படும் கருமுட்டை வெளியேறும் காலத்தில் முன்னப்பின்ன ஏதேனும் மாறுதல் இருந்தால் நிச்சயமாக கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. 28 நாள் சுழற்சி முறைக்கும் குறைவான நாட்களில் பீரியட்ஸ் வரப்பெறுவோருக்கும் மாதவிடாயின் போது உடலுறவு கொள்வதால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், ஒருவேளை நீங்கள் கர்ப்பத்துக்கு திட்டமிடவில்லை என்றால் மாதவிடாய் கால உடலுறவின் போது பாதுகாப்புடன் இருப்பது நலம்.
பீரியட் செக்ஸால் இடத்தூய்மைக்கு ரிஸ்க்!
அட பீரியட் செக்ஸ் எங்களுக்கு ஓகே தான் ஆனால் அந்த நேரத்தில் இடம் முழுவதும் ரத்தம் சிந்தினால் பெட் என்னவாகும் என்ற பதற்றம் சிலருக்கு இருக்கும். உண்மைதான். ஒருவேளை உங்களுக்கு பீரியட் செக்ஸ் ஓகே என்றால் உங்கள் படுக்கை விரிப்போ இல்லை நீங்கள் எந்த இடத்தை தேர்வு செய்கிறீர்களோ அந்த இடத்தில் ஒரு பெரிய விரிப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த விரிப்பை உறவுக்குப் பின்னால் துவைத்துக் கொள்ளலாம். இல்லை இது சரிப்பட்டு வராது என நினைத்தீர்கள் என்றால், ஒரு பெஸ்ட் தீர்வு இருக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டு குளியலறையிலேயே உறவை வைத்துக் கொள்ளலாம். இது பெஸ்ட் தானே!
பீரியட் செக்ஸ் சுகாதாரமற்றது!
மாதவிடாய் கால உறவு சுகாதாரமற்றது என்று உங்களிடம் யாராவது சொன்னால் நான் சொல்லும் இந்தப் பதிலை அவர்களுக்குச் சொல்லி புரிதலை ஏற்படுத்துங்கள். பீரியட் செக்ஸ் மூலம் அந்த நாட்களில் நீங்கள் உங்கள் இணையரை ஒதுக்கவில்லை என்ற அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தலாம். நிச்சயமாக அவரும் விருப்பமாக இருக்கும் பட்சத்திலேயே பீரியட் செக்ஸை வைத்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் சமயத்தில் அதிகமான லூப்ரிகேஷன் கிடைப்பதால் இந்தக் காலத்தில் நீங்கள் வைத்துக் கொள்ளும் உங்களுக்கு கூடுதல் இன்பத்தையே தரும். பீரியட் ரத்தத்தில் மட்டுமல்ல எல்லா ரத்தத்திலுமே பாக்டீரியாக்கள் இருக்கும். அதனால் பீரியட் செக்ஸின் போது ஃபீமேல் காண்டம் அல்லது ஓரல் செக்ஸுக்கு முற்பட்டால் டென்டல் டேம் ஆகியனவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவர் ட்வீக் கூறியிருக்கிறார். இதனை நீங்கள் மேற்கோள் காட்டலாம்.
பீரியட் செக்ஸால் பால்வினை நோய்கள் பரவாது என்பது உண்மையா?
பீரியட் செக்ஸால் பால்வினை நோய்கள் பரவாது என்பது நிச்சயமாக உண்மையானது அல்ல. ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தில் அவரது பிறப்புறுப்பின் pH ரேஞ்ச் மாறும். அதனால் அந்த நேரங்களில் கூடுதல் பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். சைஃபிலிஸ், ஹெபாடிடிஸ், ஹெச்ஐவி போன்ற பாலிவிணை நோய்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளலாம்.
பீரியட் செக்ஸ் வலிக்குமா?
பீரியட் செக்ஸ் என்று சொன்னவுடனேயே பல பெண்களுக்கு பயம் தொற்றிக் கொள்ளும். ஏற்கெனவே வலியில் இருக்கிறேன் என்று வெறும் முத்தத்தைக் கூட தவிர்க்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது பீரியட் வேளையில் உங்களின் இணையருக்கும் விருப்பம் என்றால் நீங்கள் தாராளமாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். இதனால் மென்ஸ்ட்ரூவல் க்ராம்ப்ஸ் எனப்படும் வயிற்று வலியில் இருந்து பெரிய நிவாரணம் கிடைக்கும். பீரியட் செக்ஸால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் உங்களுக்கு இந்த ரிலீஃப் கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு பீரியட் நேர செக்ஸின் போது வலி ஏற்பட்டால் பொசிஷனை மாற்றி உறவு கொள்ளலாம். இது தனிநபர் சார்ந்தது. இல்லை பாதுகாப்பாக வெறும் ஓரல் செக்ஸ், சுய இன்பம் என எதை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப பின்பற்றிக் கொள்ளலாம்.
பீரியட் செக்ஸால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுமா?
பீரியட் செக்ஸால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுமா? என்ற சந்தேகமும் நிறைய பெண்களிடம் இருக்கிறது. உங்கள் மாதவிடாய் சுழற்றிக்கு ஹார்மோன்கள் தான் முக்கியக் காரணம். ஒருவேளை மரபணு ரீதியாகவோ அல்லது மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலோ ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படலாம்.
பீரியட் செக்ஸ் மூலம் டோபமைன் அதிகரிக்கும் இதனால், உங்கள் மாதவிடாய் கால வலி குறையும். மேலும் பீரியட் செக்ஸால் ரத்தம் வெளியேறிவிடுவதால் உதிரப்போக்கும் மிதமாக இருக்கும்.
இவ்வாறு தேர்ந்த மருத்துவர்கள் பீரியட் செக்ஸ் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவான அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )