மேலும் அறிய

Thyroid Snack: தேங்காய்.. பூசணி, சியா விதைகள்.. தைராய்டு பிரச்சனை இருக்கா? உங்களுக்கான முக்கிய உணவுகள்..

உணவே மருந்து என்ற திருமந்திரத்தை அருளிய திருமூலர் பூமியில் நாம் வாழ்கிறோம். அப்படியென்றால் எல்லா நோய்களையும் தடுக்க தொற்றுகளில் இருந்து தற்காக்க நிச்சயமாக ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் உதவும்.

உணவே மருந்து என்ற திருமந்திரத்தை அருளிய திருமூலர் பூமியில் நாம் வாழ்கிறோம். அப்படியென்றால் எல்லா நோய்களையும் தடுக்க தொற்றுகளில் இருந்து தற்காக்க நிச்சயமாக ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் உதவும். அதேபோல் சில நோய்கள் வந்துவிட்டால் மாத்திரை, மருந்துகளுடன் சில உணவுகளை தேர்ந்து உண்பது ஆரோக்கியத்தை மீட்டுத் தரும். அந்த வகையில் தைராய்டு ஹார்மோன் குறைபாட்டை சரி செய்ய உணவு பழக்க வழக்கம் மாற்றம், அவசியம். 

தைராய்டு(Thyroid) நமது கழுத்துப் பகுதியில் பட்டர்ஃபிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி.  இது சுரக்கும் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தைராய்டு சமநிலை இல்லாதவர்களுக்கு எதை சாப்பிடலாம் எதை தவிர்க்க வேண்டும் என்ற சிக்கல் இருக்கும். அவர்கள் குழம்பாமல் இதைப் பின்பற்றலாம். இரவு தூங்கும் முன் இவற்றை குறிப்பிட்ட அளவு உட்கொள்ளலாம்.

1. தினமும் 4ல் இருந்து 5 முந்திரிப் பருப்புகள்

முந்திரிப் பருப்பில் செலேனியம் எனும் தாது உள்ளது. இது தைராய்டு செயல்பாட்டை சீராக வைக்கிறது. இது ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸில் இருந்து விடுதலை தருகிறது.

2. தேங்காய் சில்:

தேங்காயில் அதிகளவு மீடியம் செயின் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதனால் தைராய்டு பிரச்சனையும் சீராகிறது.

3.  சியா சீட்ஸ்

ஊறவைத்த சியா சீட்ஸில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் தைராய்டு சுரப்பிக்கு இதம் தருகிறது. இதனால் ஹசிமோட்டோஸ் தைராய்டிட்டிஸ் குணமாகிறது. அதேபோல் டீகூர்வேயின் தைராடிட்டிஸும் சீராகிறது. 

4. பூசணி விதைகள்:

பூசணி விதைகளில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது. இது தைராய்டு ஹார்மோன் சின்தஸிஸுக்கு அவசியமானது. அதேபோல் பூசணி விதையில் ட்ரிஃப்டோபேன் இருக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்கிறது.

இவைதவிர பிரேசில் நட்ஸ் (Brazil Nuts), பிஸ்தா (Pistachios), பேரீச்சம்பழம் (Dates) ஆகியனவற்றையும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உட்கொள்ளலாம். தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஹைப்போ தைராய்டு, ஹைபர் தைராய்டு, காய்டர், சுய எதிர்ப்புசக்தி குறைபாடு நோயான ஹஷிமோட்டோ மற்றும் கிரேவ் நோய்கள் ஆகியனவற்றை உடையோர் கீழே உள்ளவற்றை உட்கொள்ளலாம்.

பிரேசில் நட்ஸ் (Brazil Nuts)

ஒரு நாளில் 2 முதல் 3 பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான செலீனியம் கிடைக்கும். செலீனியம் சீராகக் கிடைக்கப் பெறுவது தைராய்டு சீராக இயங்க அவசியமானதாகும். இது ஹஷிமோட்டோ மற்றும் கிரேவ் நோய்கள் வருவதைத் தடுக்கும். இதனால் தைராய்டு கேன்சர் வராமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல் தூக்கம், பாலியல் உறவில் ஆரோக்கியம், மூளை மற்றும் இதய நலன் பாதுகாக்கும். முடி உதிர்வதைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும். நல்ல கொலஸ்ட்ராலை கொடுத்து கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும். அதிகாலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது மூன்று வறுக்கப்பட்ட பிரேசில் நட்ஸ் சாப்பிட்டு வாருங்கள்.

பிஸ்தா (Pistachios)

பிஸ்தாவில் நார்ச்சத்தும் மற்ற அத்தியாவசிய தாதுக்களும் அதிகம். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு தைராய்டு பிரச்சனையில் தீர்வு தரும். வறுத்த உப்பு சேர்க்கப்பட்ட பிஸ்தா குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது ஆகும். தேவையில்லாத நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை பிஸ்தா தவிர்க்கும். காரணம் பிஸ்தாவை உட்கொள்ளும் போது வயிற்றில் ஒரு நிறைவு உண்டாகும். தைராய்டு பக்க விளைவுகளான மலச்சிக்கல், இமோஷனல் ஹங்கர், மூட் ஸ்விங்க்ஸ், தூக்கமின்மை, வறட்சி, மன அழுத்தம் ஆகியனவற்றை இது சரி செய்யும். ஒரு கை நிறைய பிஸ்தா, எந்த வேளையில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

பேரீச்சம்பழம் (Dates)

ஐயோடின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது பேரீச்சம்பழம். இது T3 and T4 ஆகிய இரண்டு தைராய்டு ஹார்மோன்களையும் பாதுகாக்கும். அயர்ச்சி, முடி உதிர்தல், ரத்த சோகை, அதீத உதிரப்போக்கு, இனிப்பு சாப்பிடும் உணர்வு, தலைவலி, மலச்சிக்கல், மூட்டு வலிகள் ஆகியனவற்றை சரி செய்யும். இரவு முழுவதும் 3 அல்லது 4 பேரீச்சம் பழங்களை ஊற வைத்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது மாலை நேர நொறுக்காகவும் சாப்பிடலாம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
TN Low Pressure Area: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
Narendra Modi: தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்;  என்ன சொல்லி இருக்கார் பாருங்க
தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
TN Low Pressure Area: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
Narendra Modi: தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்;  என்ன சொல்லி இருக்கார் பாருங்க
தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
கேரளாவில் அதிர்ச்சி! அமீபா மூளைக்காய்ச்சல்: 40 பேர் பலி, திருவனந்தபுரத்தில் 8 பேர் மரணம் - காரணம் என்ன?
கேரளாவில் அதிர்ச்சி! அமீபா மூளைக்காய்ச்சல்: 40 பேர் பலி, திருவனந்தபுரத்தில் 8 பேர் மரணம் - காரணம் என்ன?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
Embed widget