Rashtrapati Bhawan Marriage: 96 ஆண்டுகால வரலாறு.. குடியரசு தலைவர் மாளிகையில் முதல் திருமணம், பூனம் குப்தாவிற்கு மட்டும் அனுமதி ஏன்?
Rashtrapati Bhawan Marriage: இந்திய வரலாற்றில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள, முதல் திருமணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Rashtrapati Bhawan Marriage: இந்திய வரலாற்றில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் முதல் திருமணம், வரும் பிப்ரவரி 12ம் தேதி அரங்கேற உள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையில் திருமணம்:
டெல்லியில் அமைந்துள்ள ராஷ்ட்ரபதி பவன் எனப்படும் குடியரசு தலைவர் மாளிகை, இந்தியாவின் தலைசிறந்த அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. 17 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணிகளின் முடிவில் இறுதி வடிவம் பெற்ற குடியரசு தலைவர் மாளிகை, 330 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள நான்கு மாடிக் கட்டிடமாகும். 70 கோடி செங்கற்களால் கட்டப்பட்ட இந்த மாளிகையில் 340 அறைகள், 37 ஆடிட்டோரியங்கள், 74 வராண்டாக்கள், 2 சமையலறைகள் மற்றும் 37 நீரூற்றுகள் உள்ளன. நாட்ட்ன் முதல் குடிமகனான குடியரசு தலைவர் அதிகாப்பூர்வ இல்லமாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புகளை கொண்ட, 96 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் முதல் முறையாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது.
96 ஆண்டுகால வரலாற்றில் முதல் திருமணம்:
நூற்றாண்டை நெருங்கும் குடியரசு தலைவர் மாளிகையில் முதல் முறையாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு ஒப்புதல் அளித்த பிறகு, பிப்ரவரி 12 ஆம் தேதி உலகின் இரண்டாவது பெரிய அரச தலைவரின் இல்லத்தின் வளாகத்திற்குள் இந்த விழா நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) அதிகாரி பூனம் குப்தா ஆவார். தற்போது இவர் குடியரசு தலைவர் மாளிகையில் தான் பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பூனம் குப்தா?
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியைச் சேர்ந்த பூனம் குப்தா, சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்டாகவும், குடியரசு தலைவர் இல்லத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் (பிஎஸ்ஓ) பணியாற்றி வருகிறார். 74வது குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து பெண்களைக் கொண்ட படைப்பிரிவை குப்தா வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது. குப்தா கணிதத்தில் இளங்கலைப் பட்டம், கல்வியில் இளங்கலை (BEd) மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டில், அவர் UPSC CAPF தேர்வில் 81 வது இடத்தைப் பிடித்தார்.
பூனம் குப்தாவின் பணி வரலாறு:
குடியரசு தலைவரின் இல்லத்தில் தற்போதைய பணிக்கு முன்பு, பூனம் குப்தா பீகாரின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும் பணியாற்றினார். தனது தொழில்முறை சாதனைகளைத் தவிர, இன்ஸ்டாகிராமில் அவர் தீவிரமாகக் களமாடி வரு கிறார். அங்கு அவர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்திகள் மற்றும் அவரது பணி போன்ற ஊக்கமளிக்கும் உள்ளடக்கங்களை இடுகையிடுகிறார். சேவை மீதான அவரது ஆர்வம் அவரது ஆன்லைன் இருப்பு மூலம் தெளிவாகத் தெரிகிறது, இது மற்ற பெண்களுக்கும் ஊக்கத்தை அளிக்கிறது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைத் திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்ட திரவுபதி முர்மு, அதைப் பற்றி அறிந்ததும், அன்னை தெரசா கிரவுன் வளாகத்தில் அவரது திருமண விழாவை நடத்த அனுமதி அளித்துள்ளார்.
மணமகன் யார்?
பூனம் குப்தா தனது சக சிஆர்பிஎஃப் அதிகாரி அவ்னீஷ் குமாரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் ஜம்மு & காஷ்மீரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. திருமண விழா கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் நடைபெறும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், ராஷ்டிரபதி பவனில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

