மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளுக்கான பைக் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா? உண்மை என்ன?

இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் மாற்றுத்திறனாளி இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இது உண்மையா? இல்லையா? என தெரிந்து கொள்வோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “ஏன் இஸ்லாமியர் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா? தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா?” என்ற கேப்ஸ உடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், இஸ்லாமிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பைக் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா? உண்மை என்ன?

Fact-check:

நாம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இத்திட்டம் அனைத்து மதத்தின்ருக்கானதும் என்றும் தெரியவந்தது.

வைரலாகும் தகவல் குறித்த உண்மை தன்மையை ஆராய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் அதே புகைப்படம் தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Chief Minister of Tamil Nadu (@cmotamilnadu)

கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் கடந்த மார்ச் 3ஆம் தேதி இது தொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.423.18 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், வைரலாகும் அதே புகைப்படம், “பெண் ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்ற கேப்ஷனுடன் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும், செய்தியில் எந்த இடத்திலும் இத்திட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது என்று குறிப்பிடப்படவில்லை.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் நாகப்பட்டினத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி பெட்ரோல் வாகனத்தை பெற்றுக்கொண்ட டில்லி பாபு என்கிற மாற்றுத்திறனாளி பயனாளர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைக் கொண்டு இத்திட்டமானது அனைத்து மதத்தினருக்குமானது என்று தெரிய வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் இணையதளத்தில் இத்திட்டத்திற்கான இரண்டு தகுதிகளாக, 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும், இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கும் இஸ்லாமியர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கான பைக் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா? உண்மை என்ன?

Conclusion:

முடிவாக நம் தேடலில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல் உண்மை இல்லை என்றும் இத்திட்டம் அனைத்து மதத்தினருக்குமானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
Iran Protest Trump: ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
Embed widget