மேலும் அறிய

Fact Check: குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் வெளியிட்டதா சன் டிவி? உண்மை என்ன

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி விளம்பரம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறன், இவர் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன் வழி பேரன். சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் கருணாநிதிக்கும் குடும்ப ரீதியாக தொடர்பு இருப்பதால் சன் தொலைக்காட்சி குறித்து வலதுசாரியினர் அவதூறுகளை பரப்புவது வழக்கம்.

இந்நிலையில், “குடி பழக்கத்தை ஆதரித்து சன்டீவியின் விளம்பரத்தை பாருங்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், “குடித்தால்(மது அருந்துதல்) கெட்டவன் என்று யார் சொன்னது” என்று மனைவி தனது தாயிடம் கணவர் குறித்து கூறுவது போல் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

Fact Check: குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் வெளியிட்டதா சன் டிவி? உண்மை என்ன

மேலும், “என் கணவர் குடிகாரர் தான் ஆனால், கெட்டவர் கிடையாது‌. இங்கு குடிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை, குடிக்காதவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை” என்று குடிப்பவர்களை நல்லவர்கள் போன்று காண்பித்துள்ளனர். இக்காணொலி, சன் டிவியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பரப்பி வருகின்றனர்.

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்கணொலி பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மைத்தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மார்ச் 15ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி The Couples Hub என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த சேனலை ஆய்வு செய்ததில் வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரும் பல்வேறு பொழுதுபோக்கு காணொலிகளை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல்வேறு பொழுதுபோக்கு காணொலிகளை அதே சேனலில் வெளியிட்டுள்ளனர். sathya_dharshan_ என்ற அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் காணொலிகளை பதிவிட்டுள்ளனர்.

வைரலாகும் காணொலியை ஆய்வு செய்ததில் விளம்பரப்படுத்தக்கூடிய எந்த ஒரு சேவையோ அல்லது பொருளோ அதில் இல்லை. இத்தகைய காணொலியை சன் டிவியில் விளம்பரம் செய்ய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. மேலும், காணொலியில் பெண்ணின் தாயார் பேசக்கூடிய காட்சி வரும்போது அவருக்கு பின்னால் இருக்கக்கூடிய டிவியில் சன் டிவி ஒளிபரப்பாகிறது, அதன் லோகோவும் தெளிவாக தெரிகிறது. இதனைக் கொண்டு இக்காணொலி சன் டிவியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Conclusion:

நம் தேடலின் குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
TVK VIJAY: டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
TVK VIJAY: டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
Venezuela President Trump?: என்னது.. வெனிசுலாவின் தற்காலிக அதிபரா.?! தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு வைரல்
என்னது.. வெனிசுலாவின் தற்காலிக அதிபரா.?! தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு வைரல்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
Double Decker Bus: சுற்றுலா தளங்களை டபுள் டக்கர் பஸ்சில் சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்.!எந்த ரூட்.? எவ்வளவு கட்டணம்.?
சுற்றுலா தளங்களை டபுள் டக்கர் பஸ்சில் சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்.! எந்த ரூட்.? எவ்வளவு கட்டணம்.?
Embed widget