Madan Gowri: கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகும் மதன்கௌரி.. இதுதான் புத்தாண்டு சர்ப்ரைஸ்...!
பிரபல யூ டிபர் தமிழ் திரையுலகின் நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
யூ டியூப் மூலம் மிகவும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் மதன்கெளரி. பல அறியாத தகவல்களை தன்னுடைய யூ டியூப் சேனல் மூலமாக மக்களுக்கு பகிர்ந்தார். 6.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள யூ டியூப் சேனலின் உரிமையாளர் மதன்கௌரிக்கு திரைப்பிரபலங்களை போலவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இதுவரை யூ டியூப் மூலமாக மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த மதன்கௌரி முதன்முறையாக நடிகராக அறிமுகமாக உள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான நந்தா பெரியசாமி இயக்கத்தில் தற்போது நாயகனாக அறிமுகமாக உள்ளார்.
அவர் இயக்கத்தில் மதன்கௌரி நாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு “தேடி தேடி பார்த்தேன்” என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். நடன இயக்குனராக பாப்பி பணிபுரிகிறார். எடிட்டர் ஆண்டனி படத்தொகுப்பு மேற்கொள்கிறார். காதல் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகியாக ஷ்ரிதா ராவ் நடிக்கிறார்.
எட்செட்ரான எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். முதன்முறை நாயகனாக வெள்ளத்திரையில் அறிமுகமாக உள்ள மதன்கௌரிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான யூ டியூபர்களில் ஒருவரும், தமிழ்நாட்டின் முன்னணி யூ டிபராகவும் வலம் வரும் மதன்கௌரி தற்போது கோலிவுட்டில் கால்தடம் பதித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பான செய்தியாக உள்ளது.
நந்தா பெரியசாமி முதன்முறையாக 2005ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ஒரு கல்லூரியின் கதை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர், மாத்தி யோசி, அழகன் அழகி, வண்ண ஜிகினா படங்களை இயக்கினார். கடந்தாண்டு கவுதம் கார்த்திக், சேரன் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
நந்தா பெரியசாமி இயக்குனராக மட்டுமின்றி மாயாண்டி குடும்பத்தார், யோகி, மிளகா, கோரிப்பாளையம், ரா ரா, சண்டைக்கோழி 2 மற்றும் மார்க்கெட் ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: Thunivu: வில்லத்தனம்.. நெகட்டிவ் ரோல்.. மெகா ஹிட் பட்டியலில் இணையுமா துணிவு..? வரலாறு சொல்வது இதுதான்..!
மேலும் படிக்க: Ranbir Kapoor: இரத்தம் சொட்ட சொட்ட ரன்பீர் கபூர்.. புத்தாண்டு தினத்தில் ரசிகர்களை மிரளவைத்த புகைப்படம்!