மேலும் அறிய

Thunivu: வில்லத்தனம்.. நெகட்டிவ் ரோல்.. மெகா ஹிட் பட்டியலில் இணையுமா துணிவு..? வரலாறு சொல்வது இதுதான்..!

துணிவு படத்தில் அஜித் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக ட்ரெயிலர் ரிலீசாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகிற்கு வரும் பொங்கல் பண்டிகை மிகவும் கொண்டாட்டமான பண்டிகையாக அமைய உள்ளது. வரும் பொங்கலுக்கு துணிவு படமும், வாரிசு படமும் நேருக்கு நேர் மோத உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் துணிவு:

இந்த நிலையில், துணிவு படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. வங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரெயிலரில் அஜித்குமார் கொள்ளை கூட்டத்தின் தலைவனாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

தமிழ் திரையுலகிலே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் அஜித்குமார் முதலிடத்தில் உள்ளார். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது. அந்த வகையில் வெளியான படங்களின் பட்டியலை கீழே காணலாம்.

  1. வாலி

1999ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த அஜித் அசத்தியிருப்பார். அதில், அண்ணன் அஜித் தம்பி அஜித் மனைவி மீது ஆசைப்படும் நபராக வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்தப்படம் இப்போதும் அஜித் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாகும்.

  1. வரலாறு

2006ம் ஆண்டு வெளியான வரலாறு திரைப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். அந்த படத்தில் தாய்க்காக தந்தையை பழி வாங்கும் மகனாக வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தும் அஜித் இடைவேளையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பார்.

  1. மங்காத்தா

2011ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இந்த படத்திற்கு பிறகே மிகப்பெரிய ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர். மங்காத்தாவில் சூதாட்ட பணத்தை கொள்ளையடிக்க அர்ஜூன் – அஜித் இணைந்து தீட்டும் திட்டம் கிளைமேக்சில் வெளிப்படுவது படத்திலே மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்தது. அதுவே படத்தின் மாபெரும் வெற்றியாக அமைந்தது.

இந்த படங்கள் தவிர அட்டகாசத்தில் குருவாகவும், ஆரம்பத்தில் அசோக்காகவும், வேதாளத்தில் ப்ளாஷ்பேக் காட்சியிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அஜித். மேற்கண்ட படங்கள் அனைத்தும் அஜித்தின் மாபெரும் வெற்றிப்படங்களின் வரிசையில் அமைந்த திரைப்படங்கள் ஆகும். மேற்கண்ட படங்களைப் போலவே துணிவிலும் அஜித் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் துணிவு படமும் மாபெரும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Embed widget