Yogi Babu | ராமேஸ்வரம் டூ சென்னை.. பீஸ்டில் இணைந்த யோகிபாபு!
பிரபல இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மூன்று வில்லன் நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே டாக்டர் படம் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் பீஸ்டில் நடித்து வருகின்றனர்.
பிரபல இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மூன்று வில்லன் நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். மலையாள நடிகரான ஷைன்டாம் சாக்கோ ஏற்கனவே வில்லனாக நடிக்கிறார். சார்பட்டா படத்தின் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமான டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லக்கலும் நடிக்கிறார். இவரும் வில்லனாக இருப்பார் எனக் கூறப்படுகிறது
இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல நடிகர் யோகிபாபு பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் 'AV 33' படப்பிடிப்புக்காக ராமேஸ்வரத்தில் இருந்த யோகிபாபு பீஸ்ட் படத்திற்காக சென்னை விரைந்துள்ளார். ராமேஸ்வரம் டூ சென்னை 500கிமீ பயணம் செய்து பீஸ்டில் இணைந்துள்ளார் யோகிபாபு.
ஒரு கல்லு இரண்டு மாங்காய் இல்ல; ரெண்டு பந்துல ரெண்டு மாங்கா- வைரல் பின் பௌலிங் வீடியோ
ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கும் யோகிபாபு, ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலும் அளிப்பார். அதன்படி ரசிகர் ஒருவர் பீஸ்ட் திரைப்படத்தில் எப்போது இணைவீர்கள் என்று கேள்வி எழுப்ப நாளை என பதிவிட்டுள்ளார். அவர் இந்த பதிலை நேற்று இரவு பதிவிட்டுள்ளார். அதனால் இன்று முதல் பீஸ்டில் யோகிபாபு இணைந்துள்ளார்.
விஜய்யின் 65 வது திரைப்படமான பீஸ்டின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. இப்படத்தில் தளபதி விஜய் ஒரு புதிய அவதாரத்தில் காணப்படுவார் என்று படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். விஜய்யின் இந்தப் படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் பூஜா ஹெக்டே திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
Bro Beast Shooting la Eppo join pannuvinga #Beast
— ᴍᴇʀsᴀʟ_ɢᴏᴋᴜʟ (@MersalGokul01) August 10, 2021