மேலும் அறிய

Yearender 2021 | எல்லாமே பரபர வெப் சீரிஸ்.. 2021ல் வெளியான டாப் 10 சீரிஸ் லிஸ்ட்!

Yearender 2021 : 2021ம் ஆண்டு வெளியான டாப் 10 வெப் சீரிஸ்களை IMDb வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டு ஓடிடியின் அசுர வளர்ச்சி காலம் என்றே சொல்லலாம்.கொரோனாவால் கவனிக்கப்பட்டது ஓடிடி. மக்களிடையே நல்ல வரவேற்பையும் சம்பாதித்தது. இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஓடிடி நிறுவனங்கள் படங்களை வாங்கு குவித்தன. ஒரு பக்கம் படம் என்றால் மறுபுறம் வெப் சீரிஸ்கள். பல ஜார்னர்களில் வெப் சீரிஸ்களை அள்ளித்தூவின ஓடிடிக்கள். பல வெப்சீரிஸ்கள் மக்களிடையே வரவேற்பையும் பெற்றது. அந்த வகையில் 2021ம் ஆண்டு வெளியான டாப் 10 வெப் சீரிஸ்களை IMDb வெளியிட்டுள்ளது.

1.Aspirants
ஆஸ்பிரண்ட்ஸ் 2021 ஆம் ஆண்டு வெளியான  இந்தி மொழி வெப் தொடர். இதனை தி வைரல் ஃபீவர் (TVF) தயாரித்து அருணாப் குமார் மற்றும் ஷ்ரேயான்ஷ் பாண்டே ஆகியோர் தயாரித்தனர். தீபேஷ் சுமித்ரா ஜகதீஷ் எழுதி அபூர்வ் சிங் கார்க்கி இயக்கினார்.  டெல்லி ராஜிந்தர் நகரில் UPSC தேர்வுக்கு தயாராகும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

2.Dhindora

திண்டோரா என்பது இந்திய யூடியூபர் புவன் பாம் உருவாக்கி ஹிமாங்க் கவுர் இயக்கிய வெப் சீரிஸ் . இதில் புவன் பாம், காயத்ரி பரத்வாஜ், அனுப் சோனி, ராஜேஷ் தைலாங் ஆகியோர் நடித்துள்ளனர். காமெடி ஜார்னரில் உருவான இந்த தொடரஒ BBkiVines புரொடக்‌ஷன் லிமிடெட் என்ற பெயரில் ரோஹித் ராஜ் மற்றும் புவன் பாம் ஆகிய இருவரும் தயாரித்தனர். இந்தத் தயாரிப்பின் முதல் தொடர் இதுவாகும்.

3.The Family Man
சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட ஒரு வெப் சீரிஸ்.  இந்த வெப் சீரிஸ்  மொத்தம் 9 எபிசோட்களாக வெளியானது. இந்த சீரிசில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்த்துள்ளனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த தொடர் சில சர்ச்சைகளும் சிக்கியது

Yearender 2021 | எல்லாமே பரபர வெப் சீரிஸ்.. 2021ல் வெளியான டாப் 10 சீரிஸ் லிஸ்ட்!

4.The Last Hour 

தி லாஸ்ட் ஹவர் என்பது அமேசான் பிரைமில் வெளியான இந்திய சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ். இதில் சஞ்சய் கபூர், கர்மா தகாபா, ஷஹானா கோஸ்வாமி, ரைமா சென், ஷைலி கிருஷென் மற்றும் மந்தாகினி கோஸ்வாமி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் குமார் மற்றும் அனுபமா மின்ஸ் உருவாக்கி இயக்கி, தயாரித்துள்ளனர்.  இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசக்கூடிய ஒரு மர்மமான ஷாமனின் வாழ்க்கையையும், அதைச் சுற்றி நடக்கும் அமானுஷ்யத்தையும் மையமாக வைத்து இந்த தொடர் நகரும்

5.Sunflower

Sunflower ஒரு ப்ளாக் காமெடி ஜார்னர் தொடராகும். ZEE5ல் வெளியான இந்த தொடரை விகாஸ் பாஹ்ல் இயக்கினார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்தத் தொடர் 11 ஜூன் 2021 அன்று ZEE5 இல் வெளியானது.  நகைச்சுவை நடிகரான சுனில் குரோவர் சோனுவாக முக்கிய பாத்திரத்தில் நடித்தார்

6.Candy
பள்ளி மாணவர் ஒருவரின் கொலையை முன் வைத்து நகரும் தொடராகும்.  இது அக்ரிம் ஜோஷி மற்றும் டெபோஜித் தாஸ் புர்காவஸ்தா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு  தொடராகும். இதில் ரோனித் ராய், ரிச்சா சத்தா, மனு ரிஷி சத்தா, கோபால் தத் திவாரி மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Yearender 2021 | எல்லாமே பரபர வெப் சீரிஸ்.. 2021ல் வெளியான டாப் 10 சீரிஸ் லிஸ்ட்!

7.Ray
ரே என்பது சத்யஜித் ரேயின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சயந்தன் முகர்ஜியால் உருவாக்கப்பட்ட ஆந்தாலஜி தொடராகும். நெட்ஃபிளிக்ஸில் வெளியானதொடர் இது. இந்தத் தொடரை ஸ்ரீஜித் முகர்ஜி, வாசன் பாலா மற்றும் அபிஷேக் சவுபே ஆகியோர் இயக்கியுள்ளனர்.

8.Grahan

கிரஹான் என்பது சத்ய வியாஸின் சௌராசி புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஹாட்ஸ்டாருக்காக ரஞ்சன் சாண்டல் இயக்கிய தொடராகும். இந்தத் தொடரில் பவன் மல்ஹோத்ரா, சோயா ஹுசைன், அன்ஷுமான் புஷ்கர் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

9.November Story
நவம்பர் ஸ்டோரி என்பது இந்திரா சுப்ரமணியன் இயக்கிய த்ரில் வகை தொடராகும். ஹாட்ஸ்டாருக்காக விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்த இந்தத் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் பசுபதி எம்., ஜி.எம். குமார் மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்தனர்.

10.Mumbai Diaries 26/11
26/11 சம்பவத்தைப் பற்றி பல்வேறு திரைப்படங்கள், சீரிஸ் முதலான படைப்புகள் வெளிவந்திருந்தாலும், இந்த தொடரான ‘மும்பை டைரீஸ் 26/11’ இந்த நிகழ்வை வேறொரு தளத்தில் இருந்து அணுகியது. சில சிக்கல்களைத் தவிர்த்து, `மும்பை டைரீஸ் 26/11’ பரபரப்பான த்ரில்லர் சீரிஸ் ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift : Vikravandi school child Death : சிறுமி உயிரிழந்தது எப்படி? நெஞ்சை நொறுக்கும் காட்சி  கதறும் தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
ZIM vs AFG: விறுவிறுப்பு! சீறும் ஜிம்பாப்வே! ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான் - ரசிகர்களுக்கு ட்ரீட்தான்
ZIM vs AFG: விறுவிறுப்பு! சீறும் ஜிம்பாப்வே! ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான் - ரசிகர்களுக்கு ட்ரீட்தான்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Embed widget