நீ அந்த வீடியோவ அனுப்பு.. நான் அனுப்புறேன்.. பதிலடி கொடுத்த யாஷிகா
உனக்கு சொன்னா புரியாது நீ பிறந்த வீடியோவை அனுப்பு வைப் போட்றேன் என பதிலடி கொடுத்துள்ளார் யாஷிகா
நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த வருடம் தனது தோழியான ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரி சென்று இருந்தார். புதுச்சேரியில் பார்டியை முடித்துவிட்டு யாஷிகா ஆனந்த் மற்றும் நண்பர்களுடன் சென்னை திரும்பி வந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் அவர்கள் வாகனம் அதிவேகமாகச் சென்றது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனார் அவரது தோழியான வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் பலத்த காயமடைந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
View this post on Instagram
இந்த சூழலில் காயங்கள் சரியானதால் யாஷிகா ஆனந்த் இயல்பு நிலைக்கு திரும்பினார். மேலும் விபத்து நடந்த பகுதிக்கு சென்று தனக்கு உதவியவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். உடல்நலம் தேறிய யாஷிகா ஆனந்த் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், விபத்து வீடியோவை அனுப்புமாறு கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த யாஷிகா, உனக்கு சொன்னா புரியாது நீ பிறந்த வீடியோவை அனுப்பு வைப் போட்றேன் என பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலடிக்கு ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்