மேலும் அறிய

Yashika Anand | ''உயிர் வாழவே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது...'' கலங்கிய யாஷிகா ஆனந்த்!

ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் பவனி என யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளார்

கார் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நடிகை யாஷிகா, சாதாரணா வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் விபத்துக் குறித்தும் தோழியின் மறைவு குறித்தும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

என்னுடைய தற்போதைய உணர்வுகளை வெளிக்காட்ட முடியவில்லை. நான் உயிரோடு இருக்கவே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடம் இருந்து பிரித்துச் சென்றதற்கு பழி சுமத்துவதா? தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் பவனி. நீ என்னை மன்னிக்க மாட்டாய் தெரியும். என்னை மன்னித்துவிடு. நான் உன் குடும்பத்தை இப்படியான கஷ்ட நிலைக்கு தள்ளிவிட்டேன். நான் எப்போதுமே உயிரோடு இருக்க குற்றவுணர்ச்சியாகவே இருப்பேன். உன் ஆன்மா சாந்தியடை வேண்டும் என எண்ணுகிறேன்.நீ என்னிடம் திரும்ப வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன். ஒருநாள் உன் குடும்பம் என்னை மன்னிக்கும் என நம்புகிறேன்.  எனத் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாட விடும்பவில்லை என்னுடைய ரசிகர்களும் கொண்டாட வேண்டாம்.என்னுடைய தோழியின் குடும்பத்திற்காக பிரார்த்தியுங்கள். கடவுள் அவர்களுக்கு மன உறுதியை கொடுக்க வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். யாஷிகாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றன. உங்கள் தோழியின் ஆன்மா சாந்தியடையும் என்றும், நீங்கள் குற்றவுணர்ச்சியில் தவிக்க வேண்டாமென்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Yashika Anand | ''உயிர் வாழவே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது...'' கலங்கிய யாஷிகா ஆனந்த்!

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் நடந்த பார்ட்டியின் நடிகை யாஷிகா ஆனந்த், ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது, அமீர், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பின்பு  கடந்த 24ஆம் தேதி இரவு  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி சென்றுள்ளனர். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடிகையின் பெண் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் நடிகை யாஷிகாவுக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. கடந்த ஐந்து நாட்களான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யாஷிகா பின்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand)

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget