மேலும் அறிய

Yaathisai: 'பாண்டியர்களை போற்றும் யாத்திசை..' அமேசானில் நாளை ரிலீஸ்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

வரும் மே 12 முதல் அமேசான் படத்தில் வெளியாக இருக்கிறது யாத்திசைத் திரைப்படம்.

பொன்னியின் செல்வனைப் போல் மற்றுமொரு வரலாற்று புனைவாக யாத்திசைத் திரைப்படம் வரும் மே 12 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

யாத்திசை:

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் கவணத்தை தன் பக்கம் இழுத்து  வைத்திர்ருந்த அதே நேரத்தில் வெளியானத் திரைப்படம்  யாத்திசை. சோழர்களை பற்றியப் படம் பொன்னியின் செல்வன் என்றால் பாண்டியர்களைப் பற்றியத் திரைப்படம் யாத்திசை. ஒருவகையில் சோழர்கள் பாண்டியர்கள் ஆகியவர்களின்  வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு ரசிகர்களை தூண்டியதில்  பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பெரும் பங்குண்டு.

பொன்னியின் செல்வன் படத்தோடு ஒப்பிட்டால் மிகவும் குறைந்த பட்ஜடில்  எடுக்கப்பட்டது . இந்த படத்தின் இயக்குனர் நடிகர்கள் ஆகிய அனைவரும் புதுமுக நடிகர்கள் ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் யாத்திசை படத்திற்கு வந்த வரவேற்பு ஆச்சரியமளிக்கக் கூடியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய யாத்திசைத் திரைப்படம் வரும் மே 12-ந் தேதி(நாளை) அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

யாத்திசை கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வந்தது.தரணி ராஜெந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார். படத்தின் வசனங்களை திருமுருகன் கலிங்கம் எழுதியிருந்தார்.சக்தி மித்ரன்,சேயோன், ராஜ லக்‌ஷ்மி ஆகியவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.மேலும் குருசோம சுந்தரம், சந்திரகுமார் ஆகியவர்கள் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரணதீரனை பற்றிய கதை:

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரனதீரன் என்கிற பாண்டிய மன்னனைப் பற்றியக் கதை யாத்திசை. இந்த காலகட்டத்தில் தான் சோழர்கள் தங்களது அதிகாரத்தை இழந்து காட்டுக்குள் மறைந்து வாழ்ந்தனர் என்றும் இந்தப் ப்டம் சித்தரிக்கிறது. அதிகாரம், நிலம் ஆகியவற்றுக்காக இவர்களுக்கிடையில் நிகழும் சண்டைகளை யாத்திசைப் படம் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தப் படத்தின் உண்மைத் தன்மையைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

படத்தில் குறிப்பிடபட்டிருக்கும் காலம், மேலும் வரலாற்றுப் பிழைகள் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் யாத்திசைப் படம் ரசிகர்களால் பாராட்டப் பட்டது.இந்தப் படத்தின் இயக்குனரான் தரனி ராஜேந்திரன் இதற்கு முன்பு ஞானச் செருக்கு என்னும் குறும்படத்தை இயக்கி இருந்தார்.ஒரு முழு நேர திரைப்படம் எடுப்பது இதுவே முதல் முறை இருந்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று இயக்குனராக வென்றிருக்கிறார் தரனி ராஜேந்திரன்.

ரசிகர்கள் ஆர்வம்:

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாண்டியர்களை பற்றிய மிக சில காட்சிகளே இடம்பெற்றிருந்த நிலையில் பாண்டிய வரலாற்றை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தார்கள்.யாத்திசை அந்தக் குறையை தீர்த்து வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.மிகவும் குறைந்த செலவில் எடுக்கப் பட்ட யாத்திசை திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget