Chandramukhi 2 : சந்திரமுகி-2 படப்பிடிப்பு: வடிவேலுவை கன்னத்தில் குத்திய லாரன்ஸ், ராதிகா- வைரல் வீடியோ!
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி-2 படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுளது.
Hi friends and fans, Today Chandramukhi 2 shooting begins in Mysore with my Thalaivar and guru’s @rajinikanth blessings! I need all your wishes! 🙏🏼🙏🏼 #Chandramukhi2 pic.twitter.com/dSrD3B5Xwh
— Raghava Lawrence (@offl_Lawrence) July 15, 2022
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 700 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார்.
First schedule wrap #Chandramukhi2 nothing but high energy with @offl_Lawrence #vadivelu on #Pvasu s sets @LycaProductions pic.twitter.com/NFk7DuKTyR
— Radikaa Sarathkumar (@realradikaa) August 9, 2022
2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துள்ளதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேசமயம் நடிகை ராதிகா சரத்குமார், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் லாரன்ஸ் உடன் இணைந்து வடிவேலுவை காமெடியாக அடிக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்