மேலும் அறிய

Vidamuyarchi: அப்டேட் தராதது ஒரு குத்தமா? லைகா நிறுவனத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தை எக்ஸ் தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் மிகவுமு் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் விஜய் நடித்த கத்தி படம் மூலமாக தமிழில் அறிமுகமானது. பின்னர், கைதி நம்பர் 150, எமன், கோலமாவு கோகிலா, 2.0, காப்பான், தர்பார், பொன்னியின் செல்வன், சந்திரமுகி 2, இந்தியன் 2, வேட்டையன் என பல படங்களை தயாரித்துள்ளனர்.

விடாமுயற்சி

தற்போது லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி மற்றும் எம்புரான் படம் உள்ளது. அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படமும், மோகன்லால் நடிக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

துணிவு படம் நடித்துக்கொண்டிருக்கும்போதே அஜித்குமார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். கடந்த 2023ம் ஆண்டு விக்னேஷ்சிவன் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக திட்டமிட்டிருந்த நிலையில் கதையில் போதிய திருப்தி இல்லாத காரணத்தால் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தமானார்.

நோ அப்டேட்:

பல சிக்கல்களுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அஜர்பைஜான், துபாய் ஆகிய வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. சுமார் இரண்டு ஆண்டு காலத்தை நெருங்கும் நிலையில் விடாமுயற்சி என்ற தலைப்பும், விடாமுயற்சி படத்தின் இரண்டு, மூன்று போஸ்டர்களும் மட்டுமே வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில், தீபாவளி வெளியீடாக வேட்டையனை ரிலீஸ் செய்தது லைகா நிறுவனம். விடாமுயற்சி படம் வெளியீடு தள்ளிக்கொண்டே செல்வதால் பொங்கல் வெளியீடாக வரும் என்று அறிவிக்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் ரிலீசும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Worst Production House Lyca:

எந்தவொரு அப்டேட்டும் இல்லாத சூழலில் தற்போது எக்ஸ் தளத்தில் லைகா நிறுவனத்தை விமர்சித்து ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. #WorstProductionHouseLyca என்ற பெயரில் லைகா தயாரிப்பு நிறுவனத்தை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளை நெருங்கும் சூழலில் டீசர், பாடல்கள் என்ற எந்த அறிவிப்பும் இல்லாமல் மிகவும் அமைதியாக இருப்பதால் இவ்வாறு விமர்சித்து வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கி வரும் இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடாக வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
New Year 2025:
New Year 2025: "இருங்க பாய்" மொமண்டில் கம்பேக் கொடுக்கனுமா? 2025ல் இதை மட்டும் பண்ணுங்க!
Embed widget