‛குருபூஜைக்கு சென்றீர்களா என்றேன்... யாரு குரு என கேட்டார்...’ விஜய்சேதுபதியை தாக்க இது தான் காரணமாம்!
குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்டேன். யார் குரு என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியது.
மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. துணை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்.
ஹீரோக்களுக்குரிய இலக்கணங்களை உடைத்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்களும் ஏராளம் உள்ளனர். அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்து வித்தியாசமாக இருந்தாலும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த ஷில்பா கதாபாத்திரம் பெரும் பெயரை அவருக்கு பெற்று தந்தது. முக்கியமாக அவருக்கு அந்தக் கதாபாத்திரத்தால் அவர் தேசிய விருதையும் பெற்றார்.
இருப்பினும், சமீபகாலமாக அவரை சுற்றி சில சர்ச்சைகளும், விமர்சனங்களும் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. முக்கியமாக விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிக்கிறார். அதனால் அவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை போன்ற விமர்சனங்கள் அதிகளவில் இருக்கின்றன. அதேசமயம், விஜய் சேதுபதி இவ்வளவு படங்கள் நடிப்பதற்கு அவருக்குள் இருக்கும் உதவும் மனப்பான்மைதான் காரணம் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியை நவம்பர் 3ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் ஒருவர் தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. கன்னடர்கள் அவரை தாக்கிவிட்டனர் என முதலில் தகவல் பரவியது.
ஆனால், விஜய் சேதுபதியை தாக்கியவர் மகாத்மா காந்தி என்பதும் அவரும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர் என்பதும் பின்னர் தெரியவந்தது. எதற்காக அவர் தாக்குதல் நடத்தினார் என்ற கேள்வி பெரும்பாலானோரிடத்தில் இருந்தது.
இதற்கிடையே, விமானத்தில் வந்த விஜய் சேதுபதி உதவியாளர் ஜான்சன் என்பவருக்கும், மகாத்மா காந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதுதான் கைகலப்பாக மாறியது என்ற தகவல் வெளியானது.
இந்த சூழலில் மகாத்மா காந்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னேன். உடனே அவர் ‘இது தேசமா’ என்றார்.
அதற்கடுத்ததாக குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்டேன். யார் குரு என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியபோது விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் என்னை தாக்கினார்கள் அதனால் நான் திருப்பி தாக்கினேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vijaysethupathi: விஜய் சேதுபதி மீது தாக்குதல்.. பின்னணி என்ன?