மேலும் அறிய

பவன் கல்யாண் : பேசுவது சனாதன தர்மம்...ஆனால் மகனுக்கு மார்க் என்று பெயரா...? இதான் பின்னணி

நடிகர் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அனா லெச்னெவாவுக்கு பிறந்தவர் மார்க் ஷங்கர் பவனொவிச்..இந்த பெயரை இவருக்கு வைத்ததற்கான காரணம் என்ன தெரியுமா மக்களே

தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன் 

தெலங்கானா துணை முதலமைச்சர் பவண் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர் பவனோவிச் (10 வயது ) சிங்கப்பூரில் படித்து வந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இந்த பள்ளி செயல்பட்டு வந்தது.  நேற்று ஏப்ரல் 8 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பவன் கல்யாண் மகன் மார்க் உட்பட 20 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். மேலும் மாணவி ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். நேற்று மாலை பவன் கல்யாண் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். 

இன்று பவன் கல்யாண் சிகிச்சையில் இருக்கும் தனது மகனை சந்தித்தார். விபத்தில் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் கரும்புகையை சுவாசித்ததால் அவரது நுரையீரல் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

மகனுக்கு ஏன் மார்க் என்று பெயர் 

ரஷ்ய நடிகையான அனா லெவ்செனாவை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பவன் கல்யாண். ரஷ்ய கத்தோலிக்க கிறித்தவரான அனா திருமணத்திற்கு பின் இந்திய சடங்கு சம்பிரதாயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அதே நேரம் தனது மதத்தையும் பின்பற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மார்க் ஷங்கர் பவனோவிச் மற்றும் பொலெனா அஞ்சனா பவனோவா என இரு குழந்தைகள் உள்ளார்கள்.

அரசியல் மேடைகளில் இந்து மதத்தையும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக பேசி வருகிறார் பவன் கல்யாண். சனாதனத்தை எதிர்த்து பேசுபவர்களையும் கடுமையாக  விமர்சித்து சர்ச்சையை கிளம்ப்பியுள்ளார். இப்படியான நிலையில் சனாதனத்தை கொண்டாடும் பவன் கல்யாண் தனது மகனுக்கு ஏன் மார்க் என்கிற பெயரை வைத்துள்ளார் என்கிற கேள்வி சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.

பவன் கல்யாணின் மனைவி அனா கத்தோலிக்கர் என்பதால் கிறித்தவ பெயரான மார்க் என்கிற பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள். ஷங்கர் என்பது பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் பெயர் ஷங்கர் என்பதால் அந்த பெயரை இணைந்து மார்க் ஷங்கர் என்று வைத்துள்ளார். கடைசியாக வரும் பவனோவிச் என்பது பவன் கல்யாணின் பெயருடன் ரஷ்ய பெயரை ரஷ்ய மொழிப்படி சொல்லை இணைந்துள்ளார்

 

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget