இணையத்தில் ஓவர் நைட்டில் வைரலான பாடகர் சத்யன் மகாலிங்கம்...யார் இவர்?
Singer Sathyan : ரோஜா ரோஜா பாடலின் மூலம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளார் பாடகர் சத்யன் மகாலிங்கம்

யார் இந்த சத்யன் மகாலிங்கம்
கடந்த இரு நாட்களாக வைரலாகி வருகிறார் பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். இணையத்தில் ஒரு இளைஞர் காதலர் தினம் படத்தில் ரோஜா ரோஜா பாடலை பாடிய வீடியொ வைரலாகி வந்தது. யார் இந்த இளைஞர் என ரசிகர்கள் தேடுகையில் இது பின்னணி பாடர் சத்யன் மகாலிங்கம் என தெரியவந்துள்ளது. தமிழ் படங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ள இவருக்கு பெரியளவில் புகழோ அங்கீகாரமோ ஏன் கிடைக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
90களின் மேடைப் பாடகன்🥰
— Amutha (@Amutha74247715) September 5, 2025
நூறு தடவைக்கு மேல இதை நான் பார்த்துட்டேன் 🥰 சலிக்கவே இல்ல
ரொம்ப சாதாரணமா பாடிட்டாரு💞🥰🫰 pic.twitter.com/BTlNl8aPHQ
சத்யன் மகாலிங்கம் பாடிய பாடல்கள்
வசூல் ராஜா MBBS 2. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் – கழுகு 3. சில் சில் மழையே – அறிந்தும் அறியாமலும் 4. அட பாஸு பாஸு – பாஸ் என்கிற பாஸ்கரன் 5. குட்டி புலி கூட்டம் – துப்பாக்கி 6. கனவிலே கனவிலே – நேபாளி 7. தோஸ்த் படா தோஸ்த் – சரோஜா 8. தீயே தீயே – மாற்றான் 9. குப்பத்து ராஜாக்கள் – பானா காத்தாடி 10. பகவான் Rap Song ஆகிய பாடல்களை சத்யன் மகாலிங்கம் பாடியுள்ளார்.
200 க்கும் மேல் பாடல்களை பாடிய சத்யனுக்கு கொரோணா காலத்தில் யாரும் பாட வாய்ப்பு தராததால் ஹோட்டலில் வேலைக்குச் சென்றார். விழித்திரு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சத்யன் மகாலிங்கம். கொரோணா நோய்த் தொற்று பரவலின் போது பல்வேறு மேடை மெல்லிசை இசைக் கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வந்தனர். அவர்களுக்கு உதவும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் 3 மாதங்கள் பாடல்களை பாடி அதில் வரும் நன்கொடையை தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்திற்கு வழங்கினார். கிட்டதட்ட 16 லட்சம் ரூபாய் இப்படி அவர் நன்கொடையாக திரட்டி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மேடை மெல்லிசை கலைஞர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ 1000 செலுத்த உதவினார்.





















