Sanjay Dutt: என்னயா சொல்றீங்க..! நேரில் பார்த்தது கூட இல்லை, சஞ்சய் தத்திற்கு ரூ.72 கோடி சொத்தை எழுதி வைத்த ரசிகை
Sanjay Dutt Assets: நடிகர் சஞ்சய் தத்திற்காக அவரது தீவிர ரசிகை ஒருவர், 72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை விட்டுச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sanjay Dutt Assets: நிஷா பாட்டீல் என்பவர் தனது இறப்பிற்கு முன்பாக, 72 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்தை நடிகர் சஞ்சய் தத்தின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
ஷாக் ஆன சஞ்சய் தத்:
பாலிவுட்டின் பிரதான நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத், பல வெற்றிகளை குவித்துள்ளார். இந்தியை தாண்டி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் தற்போது அவர் நடித்து வருகிறார். நாடு முழுவதும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. அதற்கான சாட்சியாக தான், 2018 ஆம் ஆண்டில் ஒரு பெண் ரசிகர் அவரது மறைவுக்குப் பிறகு தனது ரூ.72 கோடி சொத்து சஞ்சய் தத்திற்கு சேர வேண்டும் என உயில் எழுதி வைத்து இருந்தார். இத்தனைக்கும் அந்த பெண் ஒருமுறை கூட, சஞ்சய் தத்தை சந்தித்ததே இல்லை என்பது ஆசசரியமளிக்கும் உண்மையாகும். அந்தப் பெண்ணின் பெயர் நிஷா பாட்டீல்.
யார் இந்த நிஷா பாட்டீல்?
2018 ஆம் ஆண்டில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நிஷா பாட்டீல் என்ற தீவிர ரசிகையின் முடிவால் திகைத்துப் போனார். 62 வயதான அந்த குடும்பப் பெண் மும்பையைச் சேர்ந்தவர் ஆவார். இறப்பதற்கு முன்பு தனது ரூ.72 கோடி மதிப்புள்ள முழு சொத்துக்களையும் நடிகருக்கு உயில் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நிஷா ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, தனது அனைத்து சொத்துக்களையும் சஞ்சய் தத்துக்கு மாற்றுமாறு கேட்டு தனது வங்கிக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி நடிகருக்கு முழு ஆச்சரியமாக இருந்தது, நிஷாவின் உயில் குறித்து போலீசாரால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
சஞ்சய் தத்தின் முடிவு:
ரசிகையின் முடிவு ஆச்சரியமளித்தாலும், அந்த சொத்தை ஒருபோதும் உரிமை கோரப் போவதில்லை என்று சஞ்சய் தெளிவுபடுத்தினார். நிஷா பாட்டீலை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும்,அவரது முடிவால் மிகவும் வருத்தமடைந்ததாகவும் விளக்கினார். ரூ.72 கோடி சொத்தை உரிமை கோரும் எண்ணம் நடிகருக்கு இல்லை என்றும், சொத்துக்களை நிஷாவின் குடும்பத்திற்குத் திருப்பி அனுப்ப தேவையான எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்வார் என்றும் சஞ்சய் தத்தின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார். சஞ்சய், "நான் எதையும் உரிமை கோரப் போவதில்லை. நிஷாவை எனக்குத் தெரியாது, இந்த முழு சம்பவத்தையும் பார்த்து நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்" என்றார்.
சஞ்சய் தத்தின் திரைப்பயணம்:
பாலிவுட் ஜாம்பவான்கள் மறைந்த சுனில் தத் மற்றும் நடிகை நர்கிஸின் மகன் தான் சஞ்சய் தத். அவர் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக 135 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பால் எண்ணற்ற இதயங்களை வென்றுள்ளார். அவரது சமீபத்திய படங்களைப் பற்றி பேசுகையில், 2023 இல் விஜய்யுடன் சேர்ந்து லியோவில் நடித்து இருந்தார். தற்போது, அவர் தனது அடுத்த பெரிய படமான பாகி 4 க்கு தயாராகி வருகிறார், அங்கு அவர் டைகர் ஷெராஃப் உடன் சேர்ந்து நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அதிரடி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.





















