Thaipusam 2025: தைப்பூசம் திருநாள் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

Published by: ABP NADU
Image Source: ABP NADU

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் உள்ளது.

Image Source: ABP NADU

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நன்னாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Image Source: ABP NADU

கடந்த 5ம் தேதியே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு முருகன் ஆலயங்கள் களைகட்டத் தொடங்கியது.

Image Source: ABP NADU

இந்த நிலையில், இன்று தைப்பூசம் என்பதால் காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

Image Source: ABP NADU

முருகனுக்கு பால், நெய், திருநீர், இளநீர் என பல அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

Image Source: ABP NADU

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலை தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

Image Source: ABP NADU

பக்தகோடிகள் அவர்களின் நேர்த்திக்கடனை முருகனுக்கு செலுத்திவருகின்றனர்.

Image Source: ABP NADU

இந்நிலையில் இன்று காலை முதலே முருகன் கோயில்களில் கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.

Image Source: ABP NADU