Aakash Baskaran: உதவி இயக்குனர் டூ மெகா பட்ஜெட் தயாரிப்பாளர்..அசுர வளர்ச்சி ஆகாஷ்.. யார் இவர்?
ஆகாஷ் பாஸ்கரனின் குடும்ப பிண்ணனியை எடுத்து பார்த்தால் அவரது அப்பா பாஸ்கரன் சேலத்தில் உள்ள மிகப்பிரபலமான நகைகடையான பிஆர் ஆர் என்கிற நகைகடையின் உரிமையாளர் ஆவார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் அவர் யார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
அசுர வளர்ச்சி:
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மூன்று பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது அப்படி இருக்கையில் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு என மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படத்தை தயாரித்து பலரை மலைக்க வைத்தவர் ஆகாஷ் பாஸ்கரன்
உதவி இயக்குனர்: ‘
ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான், படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார் ஆகாஷ் பாஸ்கரன், அதன் பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில், பாவக்கதைகள், அமரன் உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குனாராக பணி புரிந்துள்ளார் ஆகாஷ் பாஸ்கரன். இப்படி உதவி இயக்குனராக இருந்தவர் திடீரென தயாரிப்பாளர் ஆனது அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியது.
மிகப்பெரிய பட்ஜெட் படங்கள்:
தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள இட்லி கடை திரைப்படம் நிதி நெருக்கடியினால் சிக்கி தவித்த போது அதை தான் தயாரிப்பதாக கையில் எடுத்தார். அதன் பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா கார்த்திக்கேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம், சிம்புவின் STR-49 திரைப்படத்தையும் இவர் தான் தயாரித்து வருகிறது, இப்படி மிக குறுகிய காலத்தில் இந்த மாதிரியான மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தார். இது மட்டுமில்லாமல் அதர்வா நடிப்பில் இதயம் முரளி திரைப்படத்தை இயக்கியும் தயாரித்து வருகிறார்.
குடும்ப பின்னணி:
ஆகாஷ் பாஸ்கரனின் குடும்ப பிண்ணனியை எடுத்து பார்த்தால் அவரது அப்பா பாஸ்கரன் சேலத்தில் உள்ள மிகப்பிரபலமான நகைகடையான பிஆர் ஆர் என்கிற நகைகடையின் உரிமையாளர் ஆவார்.
திருமணம்:
இவரின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு மிகப்பிரம்மாணடமாக நடந்து முடிந்தது. கவின் கேர் நிறுவனத்தின் தலைவரான சி.கே ரங்கநாதனின் மூன்றாவது மகளான தாரணியை திருமணம் செய்துக்கொண்டார் ஆகாஷ். தாரணியின் அம்மாவான தேன்மொழி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பேத்தி ஆவார்.
இவரது திருமணத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிருந்து நடத்தி வைத்தார். இது மட்டுமில்லாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் , தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, சிவகார்த்திக்கேயன், தனுஷ், இயக்குனர் அட்லி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இவரது திருமணத்தில் கலந்துக்கொண்டனர்.
அமலாக்கத்துறை ரெய்டு:
இப்படி இருக்கையில் தான் இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி இந்த அசுர வளர்ச்சி என சினிமா வட்டாரங்களில் பேசி கொண்டிருக்கையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையானது சோதனையில் இறங்கியுள்ளதுன் என்பது குறிப்பிடத்தக்கது.






















