A.R. Rahman On Ilayaraja: வெற்றி வரும் போது ஜாதி, மதம் பார்க்குறாங்களா? - ராஜா சார் நாமக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் - ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், வெற்றி வரும் போது நீ எந்த ஊரு, மதம், ஜாதி எதையாது பார்க்குறாங்களா? ராஜா சார் நமக்கெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ”கிராமப்புரங்களில் இன்னும் நீ கீழே, நான் மேலே என்ற கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆள் நல்ல முன்னுக்கு வர வேண்டும் என்றால் அதையெல்லம் தூக்கிப்போட்டு விட்டு, கல்வியை பார்க்க வேண்டும். எப்படி நம்மை உருவாக்கி கொள்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதையெல்லாம் செய்யும் போது வெற்றி வரும். வெற்றி வரும் போது நீ எந்த ஊரு, மதம், ஜாதி எதையாது பார்க்குறாங்களா? எதையும் பார்க்க மாட்டாங்க, தூக்கிப் போட்டுடுவாங்க. சிலர் போய்ட்டு நான், இந்த மதம், இந்த ஜாதி என்னை அழுத்துகிறார்கள் என்றெல்லாம் சொல்லும் போது நீ என்னைய்யா பன்ற? எதையாவது செய். மேல வா. அதை தக்க வைத்துக்கொள்.
சில நேரம் அந்த நிலைக்கு வர ஒரு வருடம் தேவைப்படும் அல்லது இரண்டு வருடம் தேவைப்படும். அல்லது 20 வருடம் தேவைப்படும் நேரம் எடுத்துக்கோ. எல்லோருக்குள்ளேயும் ஒரு வெற்றி வீரன் இருக்கிறான். அதை வெளி கொண்டு வர வேண்டும். நான் சொன்னதுக்கு ஒரு மெயின் இன்ஸ்பிரேஷன் இளயராஜா சார். அவர் எங்கே இருந்து வந்து, எவ்வளவு பெரிய ஆளாகி 75 வருடம் கொண்டாடுவதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு. நமக்கெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷன். இன்னும் அந்த பாடலை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்கள் செய்கிறார். "we have to salute him”. இவ்வாறு ஏ.ஆர்.ராஹ்மான் கூறினார்.
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் கடந்த 1992-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரலபங்களின் கவனம் ஈர்த்தார். அடுத்து ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, காதலன், பம்பாய் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார். கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, மலையாளம் தெலுங்கு, ஆங்கில மொழி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக 2 ஆஸ்கர் விருதையும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்தவர். அவர், சினிமாவுக்கு வந்து 30 வருடம் ஆகிறது. இதைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதில் முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது மழையின் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க