மேலும் அறிய

சைக்கிளில் வாக்களித்து விஜய் விட்டுச்சென்ற குறியீடு

சைக்கிளில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய்யின் செயல், ஒரு தரப்பிற்கு ஆதரவான பிரசாரம் என சமூக வலைதளத்தில் பதிவுகள் குவிந்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கிய நிலையில், பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்குகளை உரிய வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய், சைக்கிளில் பயணம் செய்து வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தியது தான் இன்றைய ஹாட் டாபிக்.

சைக்கிளில் வாக்களித்து விஜய் விட்டுச்சென்ற குறியீடு

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினருக்கு எதிராக திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் நேற்று அதிகம் பகிர்ந்த பிரசார தகவலும், விஜயின் நடவடிக்கையும் ஒத்துப்போவதே இதற்கு காரணம். வாக்களிக்கும் முன், உங்கள் வீட்டு சிலிண்டரை பார்த்து செல்லுங்கள், வாக்குச்சாவடிக்கு செல்லும் முன் உங்கள் பைக்கில் பெட்ரோலை கவனித்து செல்லுங்கள் என பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி தி.மு.க., ஆதரவாளர்கள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

#ThalapathyVijay chose to arrive at a polling booth to cast his vote by a "black and red" color bicycle protesting fuel price hike. Now we know who #Vijay has voted for! Thanks Thalaivaa! @actorvijay 🖤❤#TamilNaduElections #TNElection #TNwithDMKpic.twitter.com/zWwqsCpXB9
— George (@VijayIsMyLife) April 6, 2021

கடந்த முறை அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்த நடிகர் விஜய், இம்முறை தனது நிலைப்பாடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்தார். இடையில் அவர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விசாரணை நடத்தியது என ஆளும் தரப்பு மீது விஜய் வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

#ThalapathyVijay arrives in cycle to cast his vote in #TamilNaduElections 👍#Thalapathy #Vijay @actorvijay pic.twitter.com/Y0MfcbNUSn
— Suresh Kondi (@V6_Suresh) April 6, 2021

பின்னர் கொரோனா விதிகள் காரணமாக தியேட்டரில் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் இருந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் நேரில் சந்தித்ததும், பின்னர் அத்திரைப்படம் தியேட்டரில் வெளியானது போது, விஜய்-அதிமுக தரப்பில் நல்லுறவு இருப்பதாக பேசப்பட்டது.

'Master'stroke 🔥

Thalapathy Vijay sends out a strong message as he arrives by bicycle to the polling station to cast his vote.#Thalapathy #TamilNaduElections2021 #Vijay pic.twitter.com/lq4D9a9hJY
— Kareem beedi (@KBeedi) April 6, 2021

அதுவரை யாருக்கும் தனது அரசியல் ஆதரவை தெரிவிக்காமல் படபிடிப்புகளில் மும்முரமாக இருந்த விஜய், கடைசி வரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்யின் செயல், திமுகவினரின் பெட்ரோ, டீசல் விலை குறித்த பிரசாரத்தின் நீட்சி என சமூக வலைதளத்தில் ஒரு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். சர்க்கார் படத்தில் வாக்களிப்பு அவசியம் குறித்து நடித்திருந்த விஜய், அதில் பைக்கில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.

Kill them with your success. Burry them with your smile.

Thalapathy 🔥#Vijay #PetrolDieselPriceHike #Cycle pic.twitter.com/lzioDKCYGX
— Sachin Francis (@SachinFrancis_) April 6, 2021

அதே போல சைக்களில் வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் விஜய் பின்னால், அவரது ரசிகர்கள் படையெடுத்து வந்ததும் அதே போன்று அமைத்திருந்தது. விஜய் விட்டுச் சென்ற இந்த குறியீட்டை அதிமுகவிற்கு எதிராக கொண்டு செல்ல இணையத்தில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது திமுக . மற்றொரு புறம் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்காக முதல்வரை சந்தித்ததை மையமாக வைத்து பதலடி தர தயாராகிறது அதிமுக ஐடி விங்க். எது எப்படியோ வாக்குப்பதிவு நாளில் நடிகர் விஜய் கொளுத்திப் போட்டது பற்றி எரிகிறது. விஜய்யிடம் இருந்து மறுப்பு அறிக்கை வந்தால் பலரின் ஊகம் தவறு. அமைதி காத்தால் ‛அதே’ தான் என புரிந்து கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget