Thalapathy 69 : அரசியலுக்கு அச்சாரம் போடுவாரா விஜய் ? தளபதி 69 படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
விஜயின் கடைசி படமாக உருவாக இருக்கும் தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது எப்படியான படமாக இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சிறு பார்வை
தி கோட்
விஜயின் தி கோட் படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போதுவரை இப்படம் உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் வாரத்திலேயே 500 கோடி வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இப்படம் வார நாட்களில் வசூலில் சின்ன சரிவை சந்தித்துள்ளது.
வசூல் ரீதியாக சறுக்கல் என்றாலும் தி கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பக்கா திரையரங்க விருந்தாக அமைந்துள்ளது.
தளபதி 69
அடுத்தபடியாக விஜய் தனது கடைசி படமாக இருக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவே அவரது கடைசி படமாகவும் இருக்கும் . இப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 69 விஜய் சம்பளம்
தி கோட் படத்திற்கு நடிகர் விஜய் ரூ 200 கோடி சம்பளமாக பெற்றார் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார் தற்போது தளபதி 69 படத்திற்கு விஜய் 275 கோடி வரை சம்பளமாக பெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விஜயின் சமபளமே 275 கோடி என்றால் படத்தின் பட்ஜெட் 400 முதல் 450 கோடியாக இருக்கமால் என்று சினிமா ஆர்வலர்கள் கணித்துள்ளார்கள்.
விஜயின் கடைசி படம் என்பதால் நிச்சயம் இப்படத்திற்கு மிகப்பெரிய மார்கெட் இருக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இப்படம் எந்த மாதிரியான படமாக இப்படம் இருக்கும் என்பதுதான் ஒரே கேள்வி .
தளபதி 69 என்ன ஸ்பெஷல்
தி கோட் படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய ரசிகர்களுக்காக படமாக தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். தன்னுடைய கடைசி படத்தை தன் அரசியல் கொள்கைகளுக்கான ஒரு அறிமுகமாக அவர் இப்படத்தை செலக்ட் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கு இயக்குநர் எச் வினோத் ஒரு சரியான தேர்வு என்றே சொல்லலா. சதுரங்க வேட்டை , தீரன் , துணிவு ஆகிய அவர் இயக்கிய படங்கள் எல்லாம் தீவிரமான அரசியலையும் அதே நேரத்தில் கமர்ஷியல் பாணியில் இந்த அரசியலை பேசும் படங்கள். கடைசியாக வெளியான துணிவு படத்திலும் வங்கிகள் கிரெடிடி கார்டுகள் வழியாக மக்களை ஏமாற்றும் அரசியலை ஒரு ஹைஸ்ட் ஜானரில் இயக்கியிருந்தார்.
திரைப்படங்களைக் காட்டிலும் பேச்சில் தனது கொள்கைகளிலும் தனது அரசியலும் அதிக தெளிவுடையவர் எச் வினோத் என்பதை அவரது நேர்காணல்கள் வழி நாம் தெரிந்துகொள்ளலாம். இதனால் தான் உலக நாயகன் கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படம் தற்போது கைவிடப்பட்டதா கிடப்பில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
ஆனால் கமலுக்கு சொன்ன அதே கதையை எச் வினோத் விஜய்க்கு மாற்றி எழுதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனால் தளபதி 69 படம் நிச்சயமாக ஒரு பிரம்மாண்டமான கதைக்களத்தில் விஜயின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்