எடையை குறைக்க ஊசி போட்டுகொள்கிறார்களா நடிகர்கள்..Ozempic , Mounjaro என்றால் என்ன ?
திரைத்துறை நட்சத்திரங்கள் தங்கள் உடல் எடையை குறைக்க சர்க்கரை நோயை குணப்படுத்த பயண்படும் Ozempic போன்ற மருந்துகளை ஊசிகளின் வழி எடுத்துக் கொள்வதாக கருத்து பரவி வருகிறது

சினிமாத் துறை நட்சத்திரங்களுக்கு தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக நடிகைகளுக்கு உடல் எடையை பேலன்ஸாக வைத்துக் கொள்வது என்பது ஒரு பெரிய நெருக்கடியும் கூட. அந்த வகையில் சமீப காலங்களில் உடல் எடையை குறைப்பதற்கு சர்க்கரை நோயை குணப்படுத்த பயண்படும் Ozempic மற்றும் Mounjaro போன்ற மருந்துகள் பயண்படுத்தப்பட்டு வருகின்றன. சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லை உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் இந்த மருந்தை ஊசி மூலம் எடுத்துக் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.
Ozempic என்றால் என்ன
சர்க்கரை நோய் குறிப்பாக Type 2 சர்க்கரை நோய்க்கு பரிந்துரைக்கப்படும் மருந்து தான் Ozempic. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க இந்த மருந்து வாரத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்வர். இந்த மருந்தை எடுத்துக் கொள்கையில் நம் உணவு செரிமானத்தை மிதப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பசியையும் குறைக்கிறது. இதனால் உடல் எடையை குறைகிறது. உடல் எடையை குறைப்பதற்கு என மருத்துவர்கள் இந்த மருந்தை பரிந்துரைப்பதில்லை என்றாலும் பல இதை எடை குறைப்பிற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
எடையைக் குறைக்க ஊசி போட்டுக்கொள்கிறார்களா பிரபலங்கள் ?
Ozempic எடுத்துக் கொள்வதை வெளிப்படையாக அறிவித்தவர் டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தனது உடல் எடையை பாதியாக குறைத்து காணப்படுகிறார். Ozempic ஊசியை அவர் எடுத்துக்கொள்வதாக பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. சமீபத்தில் நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்தபோது அவர்மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. நடிகை த்ரிஷா , நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் எடையை குறைப்பதற்கும் Ozempic மருந்தே காரணம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். கரண் ஜோகர் முதல் குஷ்பு வரை இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வந்தாலும் பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் மத்தியில் இந்த மருந்தின் பயண்பாடு அதிகரித்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க Ozempic எடுத்துக் கொள்வதில் பல பின் விளைவுகள் இருப்பதாகவும் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பகட்டத்திலே இருக்கின்றன மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















