சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் ‘கேங்கர்ஸ்’ - ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி புகைப்படங்கள்!

Published by: ஜான்சி ராணி

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர்.





இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சியில் வடிவேலு குறித்து பேசிய சுந்தர்.சி பேசுகையில், நானும், வடிவேல் சாரும் இணைந்து கிட்டதட்ட 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறோம். அவர் படத்தில் ஒரு சாதாரணக் காட்சியாக இருந்தால் கூட அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்ப்ரக்ஷன் அற்புதமாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

’கேங்கர்ஸ்' திரைப்படம் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.