Watch Video: ஆட்டோகாரர்.. ஆட்டோகாரர்.. காக்கிச் சட்டை போட்ட சிம்பு! வைரலாகும் வீடியோ!
படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் செட்டில் இருந்துதான் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக சிம்பு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிம்பு. தனது குழந்தைப் பருவம் முதல் நடிகராக இருந்து வரும் சிம்பு, இளைஞரான பிறகு பல வெற்றிப்படங்களை தந்து தொடர்ந்து நடித்து வருகிறார். உடல் எடை கூடியிருந்த சிம்பு ஈஸ்வரன் படம் மூலமாக தனது கம்பேக்கை அளித்தார். பின்னர், மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிமூலமாக மீண்டும் தன்னை வசூல் நாயகனாக நிரூபித்தார்.
அதனை அடுத்து, இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி தந்திருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு அசத்தி வருகிறார். இந்நிலையில், சிம்புவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆட்டோ ஓட்டுனர் போல உடை அணிந்து கொண்டு, ஆட்டோவில் ஏறி இறங்கும் சிம்புவின் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. படப்பிடிப்பு தளத்தில் அல்லது விளம்பர படப்பின்போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என தெரிகிறது.
கெளதம் மேனன் - சிம்பு இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஒரு சிறிய அறைக்குள் ஒரு இளைஞர் பட்டாளம் அமர்ந்தும், படுத்தும் இருக்க, லுங்கி பனியனுடன் சிம்பு அமர்ந்திருக்கிறார். இந்த செகண்ட் லுக் இணையத்தில் வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் இப்படத்தில் செட்டில் இருந்துதான் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக சிம்பு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வீடியோவைக் காண:
Autokaaran mass! Latest viral video of star #STR.. #SilambarasanTR #Atman pic.twitter.com/gkbQ2lwGga
— Kaushik LM (@LMKMovieManiac) April 11, 2022
முன்னதாக, பிக் பாஸ் அல்டிலேட் நிகழ்ச்சியைத் தொகுத்தி வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் ஏப்ரல் 10-ம் தேதி ஒளிபரப்பப்பட்டு பாலா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். வெந்து தணிந்தது காடு படம் மட்டுமின்றி, சிம்பு தற்போது கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்