மேலும் அறிய

Watch Video : புஷ்பா பாடலுக்கு நடனமாடிய நடிகை மீனா.. வைரலாகும் வீடியோ

அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் பாடலுக்கு நடிகை மீனா நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

 நடிகை மீனா

’நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனா. அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம். அன்று  ரஜினிக்கே, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு அவருடன் பல படங்களில்  ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானவர் மீனா.

ரஜினி , கமல், அஜித் , சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் திரையில் தோன்றியுள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் கமர்ஷியல் மற்றும் எதார்த்த பாணியில் அமைந்த படங்களில் அசத்திய மீனா நடிப்பைத் தவிர்த்து ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்து வருகிறார். மீனாவின் மகள் நைனிகா அட்லீ  இயக்கத்தில்  விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சை

 கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சினியர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார் நடிகை மீனா. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்தி வந்த அவரது வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்.

இதனைத் தொடர்ந்து தனது மகளுடன் மீனா வசித்து வருகிறார். இப்படியான நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகியபடியே இருந்தன. ஏற்கனவே இது தொடர்பாக விளக்கமளித்த போதும் இந்த வதந்திகளுக்கு முடிவு இல்லை.

சமீபத்தில் இந்த வதந்திகள் இன்னும் அதிகரித்த நிலையில் இது தொடர்பாக நடிகை மீனா விளக்கமளித்திருந்தார் . தற்போது தான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் மனநிலையிலையில் இல்லை என்றும் எதிர்காலத்தில் எடுக்கப்போகும் முடிவைப் பற்றி இப்போதே எப்படி சொல்ல முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். 

புஷ்பா பாடலுக்கு நடனமாடிய மீனா

View this post on Instagram
 
A post shared by Meena Sagar (@meenasagar16)

 நடிப்பு தவிர்த்து நடிகை மீனா சிறப்பாக நடனமாடக்கூடியவரும் கூட. விஜயுடன் சரக்கு வெச்சிருக்கேன் , ரஜினிகாந்த் உடன் தில்லானா தில்லானா பாடல் என பல பாடல்களில் தனது நடனத்தால் ஆச்சரியப் படுத்தியிருக்கிறார். இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தின் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பனிப்பிரதேசத்தில் தற்போது தனது சுற்றுலாவைக் கொண்டாடி வரும் மீனா தனது விடுமுறை நாட்களை இப்படியான ஜாலி வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Embed widget