watch video : மூட்டைப்பூச்சிக்கு மெஷினா? தேங்காய் உடைக்க வீடியோ பதிவிட்ட இளைஞர்! திகைத்துப்போன இணையவாசிகள்!
மேலும் அந்த நபர் முடி உதிர்விற்கான டிப்ஸையும் அந்த தேங்காயை வைத்து கொடுத்துள்ளார்.
![watch video : மூட்டைப்பூச்சிக்கு மெஷினா? தேங்காய் உடைக்க வீடியோ பதிவிட்ட இளைஞர்! திகைத்துப்போன இணையவாசிகள்! Watch: Open Coconuts At Home Easily With This Kitchen Hack (Haircare Tips Included) watch video : மூட்டைப்பூச்சிக்கு மெஷினா? தேங்காய் உடைக்க வீடியோ பதிவிட்ட இளைஞர்! திகைத்துப்போன இணையவாசிகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/02/8b2eeec9e7f42cec75a54a61318973bb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வீட்டில் ஒரு தென்னையை வளர்த்தால் அத்தனை பயனுள்ளது என்பார்கள் பெரியவர்கள் . தென்னை மரத்தில் கீற்று, தேங்காய் , இளநீர் , மட்டைகள் என அனைத்துமே நமக்கு பயன்படக்கூடிய ஒன்று. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில்தான் தேங்காயின் பயன்பாடுகள் அதிகம் . எண்ணைய் , குழம்பு , பானம் என தினமும் தேங்காயை கடந்து போகாத நாட்களே கிடையாது.
வைரல் வீடியோ :
என்னதான் தேங்காய் பலருக்கு பிடித்த உணவு பொருளாக இருந்தாலும் வெளிநாட்டவருக்கு அவற்றை உடைப்பது என்பது சவாலான விஷயம் அதற்கு பயந்தே பலரும் தேங்காயை வாங்க விரும்ப மாட்டார்கள் அல்லது புட்டிகளில் அடைக்கப்பட்ட உலர் தேங்காய் அல்லது தேங்காய் தண்ணீரை வாங்கி பயன்படுத்துவார்கள் . இந்த நிலையில் creative_explained என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் தேங்காய் உடைப்பது எப்படி என செய்துக்காட்டியுள்ளார். எடுத்தமோ, ஒரு தட்டு தட்டினோமா என தேங்காயை உடைத்து தண்ணீரைக் குடிக்காமல் ஏற் சுற்றி வளைத்து நிற்க வேண்டுமென இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது வடிவேலுவின் மூட்டைப்ப்பூச்சுக்கு மெஷின் போல இருப்பதாகவும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றார்
தேங்காய் உடைப்பது எப்படி ?
அதற்கு ஸ்க்ரூ டிரைவர் ஒன்றும் , சுத்தியல் ஒன்றும் தேவை என்கிறார் அந்த நபர். தேங்காயில் இருக்கும் மூன்று கண்களையும் ஸ்க்ரூ டிரைவரின் உதவியால் நீக்கி , அதற்கு உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் . அதன் பிறகு சுத்தியல் கொண்டு தேங்காயை சுற்றி சுற்றி தட்ட தேங்காய் உடைந்து விடும் என செய்துக்காட்டியிருக்கிறார் அந்த நபர்
View this post on Instagram
முடி உதிர்விற்கான டிப்ஸ் :
மேலும் அந்த நபர் தேங்காயை உடைத்த பிறகு அதனை கத்தியால் கீரி , ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் சில மிளகு பொடியை சேர்த்து அரைத்து , அந்த கலவையை தலையில் தடவிக்கொள்கிறார். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துமாம் . தேங்காய் தண்ணீரை உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றுங்கள் நன்றாக வளரும் என்கிறார்.
இந்தியர்கள் பலரும் இது வேடிக்கையாகவும் ! ஃபன்னியாகவும் இருக்கிறது என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்! ம்ம்ம்...சிலருக்கு பயனுள்ள வீடியோவாகவும் இருக்கலாம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)