VJ Mahalakshmi: ‛தல தீபாவளி கொண்டாடணும்...’ ரவி-மகா அவசர திருமணத்திற்கு இது தான் காரணமாம்!
எல்லாரும் கல்யாணம் பண்றதுக்கு பல காரணங்கள் இருக்கும் ஆனால் என் மனைவி மகாலட்சுமிக்கு தல தீபாவளி சீக்கிரம் கொண்டாடணும் அதனால தான் கல்யாணம் செப்டம்பர் நடந்தது.
பிரபல நடிகையும், விஜேவுமான மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவியை திருமணம் செய்துள்ள சம்பவம் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே நடிகை மகாலட்சுமியும் முருங்கைக்காய் சிப்ஸ், சுட்ட கதை போன்ற திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ரவிச்சந்திரனும் காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் மகாலட்சுமிக்கும் ரவிந்திரன் சந்திரசேகருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்கள் இருவரும் காதலித்தது அவர்களது நெருங்கிய வட்டாரத்தில் மட்டுமே தெரிந்திருந்தது, ஆனால் தற்போது அந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.
மகாலட்சுமிக்கு தயாரிப்பாளர் ரவிந்திரனுக்கும் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் நடந்து முடிந்த நிலையில் இருவரும் ஒரு பிரபல சேனலுக்கு நேர்காணல் கொடுத்துள்ளனர் அந்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர் அதை இங்கே காணலாம்.
கேள்வி: வணக்கம் உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரத்தில் ஏகப்பட்ட மாற்றுக் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களை பரவி வருகிறது இதனை எப்படி பார்க்கிறீர்கள்.
ரவிந்திரன்: நான் வந்து அதை எல்லாம் அவ்வளவு பெரிதா எடுத்துக்க மாட்டேன் ஆனால் மகாலட்சுமி அதையெல்லாம் ரொம்ப பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு மனசில் போட்டு குழப்பிக்கொண்டு இருப்பாங்க நான் சொல்றது ஒன்னே ஒன்னு தான் எங்களுக்கு புடிச்சிருந்துச்சு நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம் இதுல அவங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு புரியல நெகட்டிவா பேசுறவங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க அதுக்காக நம்ம பாத்துட்டு உட்கார முடியாது. எங்கள பத்தி பேசறதுக்கு அவங்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது அப்படி பேசினாலும் எனக்கு பிரச்சனை இல்லை நாங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
கேள்வி: அவர் எப்படி எல்லாத்தையும் கண்டுக்காம ஜாலியா இருக்காரு நீங்க ஏன் எல்லாத்தையும் ரொம்ப சீரியஸா எடுத்துக்குறீங்க.
மகாலட்சுமி: அதை நான் அப்படி எடுத்துக்க கூடாது நான் நினைப்பேன் ஆனால் நம்ப காது படவே பேசும் பொழுது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். என்னமோ கூட இருந்து பார்த்த மாதிரி பேசுவாங்க பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்புறம் என்ன ஆனா எங்களுக்கு நடுவுல என்ன மாதிரியான உறவு இருக்கணும் எங்களுக்கு தெரியும்.
கேள்வி: கல்யாணம் வந்து யார்கிட்டயும் சொல்லாம எதுக்கு இவ்வளவு அவசியமா திருப்பதியில் போய் பண்ணுங்க.
ரவிந்திரன்: ரகசியமா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல கல்யாணம் திருப்பதி பண்ணனும் எங்களுக்கு ஆசை ரிசப்ஷன் கொஞ்சம் கிராண்டா பண்ணிக்கலாம்னு கல்யாணம் சிம்பிளா பண்ணோம். இன்னொரு காரணம் கல்யாணம் செப்டம்பர் மாசம் பணத்துக்கு மகாலட்சுமிக்கு கல்யாணம் முடிந்த உடனே சில மாதங்களில் தல தீபாவளி கொண்டாடனும் என்று ஆசை அதனால் தான் செப்டம்பர் மாசம் கல்யாணம் நடந்தது நான் கல்யாணத்துக்கு போட்ட ஒரே கண்டிஷன் நான் புரட்டாசி மாசம்.
கேள்வி: கல்யாணம் யார்கிட்டயும் சொல்லாம எதுக்கு இவ்வளவு ரகசியமா திருப்பதியில் போய் பண்ணுங்க.
ரவிந்திரன்: ரகசியமா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல கல்யாணம் திருப்பதி பண்ணனும் எங்களுக்கு ஆசை ரிசப்ஷன் கொஞ்சம் கிராண்டா பண்ணிக்கலாம்னு கல்யாணம் சிம்பிளா பண்ணோம். இன்னொரு காரணம் கல்யாணம் செப்டம்பர் மாசம் பணத்துக்கு மகாலட்சுமிக்கு கல்யாணம் முடிந்த உடனே சில மாதங்களில் தல தீபாவளி கொண்டாடனும் என்று ஆசை அதனால் தான் செப்டம்பர் மாசம் கல்யாணம் நடந்தது நான் கல்யாணத்துக்கு போட்ட ஒரே கண்டிஷன் நான் புரட்டாசி மாசம் அசைவம் சாப்பிட மாட்டேன் ஆனால் மகாலட்சுமி ப்யூர் நான்வெஜிடேரியன் புரட்டாசி மாசம் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்லி தான் நான் திருமணம் செய்து கொண்டேன்.
இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் நகைச்சுவையாக பதிலளித்த புதுமணத் தம்பதியினர் மகாலட்சுமி மற்றும் ரவிந்திரன்.