மேலும் அறிய

Vishnu Vishal :உண்மை சம்பவங்களை வைத்து படம்.. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநருடன் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா பட இயக்குநர் கோகுல் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

  நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்க இருக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு, குள்ள நடி கூட்டம் , நீர்ப்பறவை, ஜீவா, மாவீரன் கிட்டு , முண்டாசுபட்டி , ராட்சசன் உள்ளிட்ட  வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால் . 2022 ஆம் ஆண்டு  இவர் நடித்த கட்டா குஸ்தி படம்  பிளாக்பஸ்டர் வெற்றி வெற்றது . இந்தப் படத்தை விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

படக்குழு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி  “எங்களின் அடுத்த  திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - ப்ரொடக்‌ஷன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப்.ஐ.ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள ஆர்யன் படமும் அதிக பொருட்செலவில், ஆக்ஷன் மற்றும் அசத்தலான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்சன் எண்டர்டெயினராக  உருவாக்கப்படவுள்ளது. 

 நடிகர் விஷ்ணு விஷால் நடித்துவரும்,  தற்போதைய திரைப்படங்களின் பணிகள்  முடிந்தவுடன் இந்தப் படத்தின் பணிகள் துவங்கும். தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகளை துவக்கியுள்ளோம். விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும். எங்களின் இந்த புதிய பயணத்தில் எப்போதும்போல், உங்கள் ஆதரவையும் அன்பையும் வழங்க வேண்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லால் சலாம்

தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள லால் சலாம் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ராந்த்,  இணைந்து நடித்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த லால் சலாம் திரைப்படம் ஒரு சில காரணங்களால் ஒத்திப்போடப்பட்டுள்ளது . லால் சலாம் படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget