GattaKusthi: மல்யுத்த களம்.. மோதி பாக்கலாமா.. வெளியானது விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ ஃபர்ஸ்ட்லுக்!
நடிகர் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
தமிழ்த் திரையுலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர், விஷ்ணு விஷால். ‘வெண்ணிலா கபடிக்குழு’ ‘இன்று நேற்று நாளை’ முண்டாசுப்பட்டி, ‘ராட்சசன்’, ‘எப்.ஐ.ஆர் என இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று, கவனம் ஈர்த்து இருக்கின்றன. இவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. விஷ்ணுவிஷாலும், தெலுங்கு பிரபல நடிகர் ரவிதேஜாவும் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப்படத்தில், கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தப்படத்தின் கிளிம்ஸ் விஷ்ணு விஷாலின், 38 ஆவது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை, செல்லா அய்யாவு இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் ரவிதேஜா நடித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் நட்ராஜின் மகளான ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் பிறந்தார். இந்த நிலையில், இவருக்கும், ரஜினி நட்ராஜிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றனர். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினர்.
View this post on Instagram
இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட ஜூவாலா கட்டா விஷ்ணுவிஷாலை நிர்வாணமாக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. முன்னாள் பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை திருமணம் செய்து வாழ்ந்துவந்த ஜூவாலா கட்டா, கடந்த 2011-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் நடித்து வரும் மோகன் தாஸ் திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கிறது.