மேலும் அறிய

Gatta Kusthi 2 : விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் மக்களை கவர்ந்ததா ? விமர்சனம் இதோ

Gatta Kusthi 2 review : கட்டா குஸ்தி 2 திரைப்படத்தைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் .

விஷ்ணு விஷால் , ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி இணைந்து நடித்துள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்த படத்தை இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மோக்ஷா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கட்டா குஸ்தி முதல் பாகத்தைப் போலவே கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் 

முதல் பாகத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு வீரா மற்றும் கீர்த்தியின் திருமண வாழ்க்கை புதிய கட்டத்தை அடைகிறது. மல்யுத்த வீராங்கனையான கீர்த்தியும், தனது பழைய ஆணாதிக்க மனப்பான்மையை மாற்றிக் கொண்ட வீராவும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில், புதிய எதிரிகள், குடும்பத்திற்குள் உருவாகும் சிக்கல்கள் மற்றும் மல்யுத்தத்தை மையமாகக் கொண்ட புதிய மோதல்கள் அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றன. தனது குடும்பத்தையும் மனைவியையும் காப்பாற்ற வீரா மீண்டும் மல்யுத்த களத்தில் இறங்க வேண்டிய சூழல் உருவாகிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ஆக்ஷன் மற்றும் விளையாட்டு அம்சங்களை இணைத்து, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது கட்டா குஸ்தி 2.

குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம் 

கட்டா குஸ்தி 2 குறித்து விமர்சகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் இப்படி கூறியுள்ளார் " நகைச்சுவை, நெகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு அருமையான குடும்பத் திரைப்படமாக கட்டா குஸ்தி 2 திரைப்படம் உருவாகியுள்ளது . பல்வேறு படங்களின் இரண்டாவது பாகங்கள் வெளியாகி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் நகைச்சுவை மற்றும் பெண்களை மையப்படுத்திய உணர்வுகளைச் சரியாகக் கலந்து இயக்குநர் செல்லா அய்யாவு இப்படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். 

திரைக்கதை மற்றும் நடிகர்களின் தேர்வு மிகச்சிறப்பு. விஷ்ணு விஷால் தனது இயல்பான வசீகரத்தால் படத்தைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளார்; ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி மீண்டும் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் சிறுமி ஜாரா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அசத்துகிறார்!

முனிஷ்கான்  ,காளி வெங்கட் மற்றும் குறிப்பாக கருணாஸ் ஆகியோரின் நகைச்சுவை அபாரம்  அவர்களின் 'டைமிங்' மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஷால் ரோல்டனின் இசை படத்தின் சூழலோடு மிக அழகாகப் பொருந்துகிறது. படத்தில் விஜய் பற்றிய ரெஃபரன்ஸ் காட்சி மிகவும் கலகலப்பானது, ஒவ்வொரு முறையும் அரங்கையே அதிரவைக்கிறது! சிறிய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும்  முற்போக்கான கருத்து மற்றும் மூன்றாம் பாகத்திற்கான அந்தச் சுவாரஸ்யமான குறிப்பு ஆகியவை இப்படத்தை ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுகின்றன. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம்!" 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Embed widget