Vishal on Sandakozhi: ஆக்ஷன் ஹீரோவா உருவெடுத்த நாள்.. 'சண்டக்கோழி' 18 ஆண்டு நிறைவு நாளில் விஷால் நெகிழ்ச்சி!
Vishal on Sandakozhi: 18 ஆண்டுகளை நிறைவு செய்த 'சண்டைக்கோழி' படம் குறித்து தனது எமோஷனலான பதிவை பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால்.
காதலும் ஆக்ஷனும் கலந்த ஒரு சூப்பர் ஹிட் படமாக 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'சண்டைக்கோழி'. லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
சண்டைக்கோழி வெளியான நாள் :
இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் விஷாலுக்கு ஒரு சிக்னேச்சர் படமாக அமைந்த திரைப்படம் 'சண்டைக்கோழி'. இன்று வரையில் திரை ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாக பதிந்துள்ளதுதான் இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த பிளாக் பஸ்டர் ஹிட் படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சோசியல் மீடியா எங்கும், ரசிகர்கள் பலர் 18 இயர்ஸ் ஆஃப் சண்டைக்கோழி என இப்படத்தை கொண்டாடி ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.
விஷாலின் பதிவு :
இந்நிலையில் சண்டைக்கோழி படத்தின் கதாநாயகன் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தனது சந்தோஷத்தையும் நன்றிகளையும் பகிர்ந்துள்ளார். "18 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2005 அன்று மாய ஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்ச்சிகளை, வார்த்தைகளில் சொல்ல முடியாது. இன்று வரை நான் திரும்பி பார்க்காததற்கு ஒரே காரணம் ஒரு பார்வையாளனாக இருந்த என் மீது, நீங்கள் பொழிந்த அன்பும் பாசமும் இன்று வரை தொடர்வதுதான்.
என்னை நம்பிய என் பெற்றோர், இயக்குநர் லிங்கு (சாமி) வரிசையாக எனக்கும் மேலே உள்ள கடவுளுக்கும் (சாமி) மற்றும் கடவுள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் ஆடியன்ஸுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் மேலும் எனது தந்தை #GKReddy மற்றும் எனது குரு #அர்ஜுன் கனவை தொடருவேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என மிக நீண்ட பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
மதுரையின் பின்னணியில் உருவான இப்படம் ஆக்ஷன் மற்றும் அழகான காதல் கதையின் இந்த படைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்று வரை கொண்டாட வைக்கிறது. சண்டைக்கோழி படத்தின் வெற்றிக்கு பிறகு 'சண்டைக்கோழி 2' வெளியானது ஆனால் பெரிய அளவில் கவனத்தை பெற தவறியது.