Watch Video : ரசிகரின் காலில் விழுந்த நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.. ஏன்? வைரலாகும் வீடியோ..
சமீபத்தில் ஒரு நிகழ்வில், விக்ரம் வேதா நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஒரு ரசிகரின் கால்களைத் தொட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’. இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான், நடிப்பில் அதே பெயரில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது.
View this post on Instagram
பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஹ்ரித்திக் ரோஷனும் ஒருவர். அவர் இரண்டு 20 வருடங்களுக்கு மேலாக ஒரு நடிகராகவும், நட்சத்திரமாகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அவரது அடுத்த படமான விக்ரம் வேதாவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், சமீபத்தில் ஒரு நிகழ்வில், யாரும் எதிர்பார்க்காத ஒன்றை ஹ்ரித்திக் செய்தார். ஒரு பிராண்ட் நிகழ்வில், ஒரு ரசிகர் நடிகரை சந்திக்க மேடைக்கு வந்தபோது அவர் ஹிருத்திக்கின் கால்களைத் தொட்டார், பதிலுக்கு நடிகர் ஹிருத்திக்கும் ரசிகரின் கால்களைத் தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hrithik Roshan touching his fan feet.😭❤ Such a gem of a person he is @iHrithik . There is really no like him.❤ #VikramVedha pic.twitter.com/DAkgijMMgE
— अमित ™ (@HRxfan_boy) August 27, 2022
தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி ஆர்யா நடிப்பில் வெளியான ‘ஓரம் போ’ படம் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமாயினர். தொடர்ந்து நடிகர் சிவா நடிப்பில் உருவான 'வா - குவாட்டர் கட்டிங்' படத்தை இயக்கிய அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டும் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படம் இவர்களது கேரியரில் மட்டுமல்லாது, விஜய் சேதுபதி கேரியரிலும் மிக முக்கியமான படமாக அமைந்தது.
Most humble superstar in the entire world. @iHrithik
— Hrithik's Empire (@HrithiksEmpire) August 27, 2022
Agree or not ? #HrithikRoshan#VikramVedha #VikramVedhateaser pic.twitter.com/53F734jJhY
சினிமா உலகில் அதிக கவனம் பெற்ற இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அந்தத்தகவலை கடந்த மார்ச் மாதம் புஷ்கர் மற்றும் காயத்ரி உறுதிப்படுத்தினர். இந்தப்படத்தை தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த YNOT Studios -வுடன் இணைந்து Plan C Studios மற்றும் Reliance Entertainment, T-Series Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. இந்தப்படத்தில் ஹிருத்திக்ரோஷன் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்திலும், சைஃப் அலி கான் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா ஆப்தே, ரோகித் சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தி ரீமேக்கிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார். 175 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.