மேலும் அறிய

Vikram Movie Update: விக்ரமிற்காக காரைக்குடி செல்லும் கமலும், விஜய்சேதுபதியும்...!

விக்ரம் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் கமல்ஹாசனும், நடிகர் விஜய்சேதுபதியும் காரைக்குடியில் 20 நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளனர்.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமானவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகம் வெளியானது. இதையடுத்து, கமல்ஹாசன் தனது முந்தைய மெகாஹிட் திரைப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. பின்னர், கமல்ஹாசனின் சட்டசபை தேர்தல் பணிகள், அரசியல் பரப்புரைகள், படத்தயாரிப்பு தரப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.


Vikram Movie Update: விக்ரமிற்காக காரைக்குடி செல்லும் கமலும், விஜய்சேதுபதியும்...!

இந்த நிலையில், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஒப்பந்தமானார். இந்த படத்திற்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு  தொடங்கப்பட்டு, அதற்கான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.

கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, பஹத்பாசில் ஆகியோரும் இணைந்துள்ளனர். முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாகவே உருவாகிவருவதாலும், கமல்ஹாசன் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பதாலும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


Vikram Movie Update: விக்ரமிற்காக காரைக்குடி செல்லும் கமலும், விஜய்சேதுபதியும்...!

தற்போது இந்த படத்திற்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற உள்ளது. 20 நாட்கள் காரைக்குடியில் நடைபெற உள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.  செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார்.

காரைக்குடியில் நடைபெற உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்சேதுபதி, கமல்ஹாசன் இடம்பெறும் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியானது. இதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஃபகத் பாசில் , விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரெண்டானதை தொடர்ந்து, விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 16ஆம் தேதி தொடங்கி, முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு, அன்று முதல் தொடங்கியது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் நடித்து வரும் நிலையில்,  ஃபாகத் ஃபாசில் தற்போது படக்குழுவினருடன் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியுடன், கமல்ஹாசன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலானது. ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயராமனின் மகனும், நடிகருமான காளிதாஸ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget