Vikram Update: கோவையில் கமல்...தொடங்கியது விக்ரம் ஷூட்டிங்... தேர்தலுக்குப் பின் மீண்டும் கோவை!
Vikram Movie Latest Update: விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது.
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படம் அனைவரிடத்திலும் பரவலான பாராட்டை பெற்றது. இதனையடுத்து அவர் கைதி படத்தை இயக்கினார். மன்சூர் அலிகானை மனதில் வைத்து கைதி கதையை லோகேஷ் எழுதியிருந்தாலும் இறுதியாக கார்த்தி அதில் நடித்தார்.
2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. கைதி ஹிட்டுக்கு பிறகு பம்பர் பரிசாக தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் ஹிட் அடித்ததால் தமிழின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரானார் லோகேஷ்.
இதனையடுத்து கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாகிவருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் glance சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, தான் கமல் ஹாசனின் ரசிகன் என்பதை சில நொடி காட்சிகளிலேயே லோகேஷ் நிரூபித்துவிட்டார் எனவும் ரசிகர்கள் புகழ்ந்தனர்.
A small gift from me to you @ikamalhaasan sir ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 6, 2021
Happy Birthday Ulaganayagan 🙏https://t.co/hmoRIZAktJ#VikramFirstGlance#HBDKamalHaasan#KamalHaasan#Vikram_April2022#Vikram
கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கடந்த மாத இறுதியில் தாம்பரத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்டப்படிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது கோவையில் நான்காம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. கோவையில் ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video | பிரச்சனை கொடுக்குறாங்க... மாநாடு திரைப்பட விழா மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு!
Bharathiraja Speech: ‛சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை’ கலாய்த்தாரா... பாராட்டினாரா பாரதிராஜா?
பாபா முதல் ஜெய்பீம் வரை.. அரசியல் தலைவர்களால் அழுத்தங்களை சந்தித்த நடிகர்கள்.. !