Vikram Movie Ticket: விக்ரம் படத்திற்காக 60 டிக்கெட்டுகள் புக் செய்த கமல் ரசிகர் - வைரலாகும் புகைப்படம்
கமல்ஹாசன், விஜய் சேதுபதி. ஃபகத் ஃபாசில் நடிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தினைப் பார்க்க ரசிகர் ஒருவர் 60 டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி. ஃபகத் ஃபாசில் நடிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தினைப் பார்க்க ரசிகர் ஒருவர் 60 டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவும் பேசுபொருள் ஆகியுள்ளது.
60 டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்:
இந்நிலையில், ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் 60 டிக்கெட்டுகளை வாங்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அவர், 60 டிக்கெட்டுகளை தன்னை சுற்றி அடுக்கி வைத்து நடுவில் படுத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
60 tickets for Friday in Prasad's Imax Hyderabad. #vikram pic.twitter.com/Jc15QASuCW
— Chandra (@Chandra05121977) May 29, 2022
சூர்யாவும் நடித்திருக்கிறார்..
விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூர்யா நடித்துள்ளதை உறுதி செய்தார். அடுத்ததாக சூர்யா ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஸ்டார் காஸ்டில் கலக்கும் விக்ரம் படத்தில் சூர்யாவும் இணைந்திருப்பதால் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என அனைவரின் ரசிகர்களையும் தியேட்டருக்கு இழுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் ரஜினி சந்திப்பு:
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் வெளியாவதால் கமலும் ப்ரோமஷனில் ஈடுபட்டுள்ளார். சாட்டிலைட் தொலைக்காட்சி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரை புரோமோஷன் நீண்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பும் கூட படத்திற்கான புரோமோஷனாகவே கணிக்கப்படுகிறது.
விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலை வைத்து இளைஞர்கள் டேன்ஸ் கவர் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதற்கிடையில் படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தின் பெயர் அமர் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.