மேலும் அறிய
Vijayakanth Death: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு .. தியேட்டர்களில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மறைவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரைப்பட விநியோகஸ்தகர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விஜயகாந்த் மறைவுக்கு திரைப்பட விநியோகஸ்தகர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இன்று தியேட்டர்களில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















