Vijay Video Call: ‛என்ன நண்பா... எப்படி இருக்க...’ வீடியோ காலில் விஜய்... ஹிட்டாகும் ‛தளபதி 66’ செட் பேக்ரவுண்ட்!
தளபதி 66 பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய் ரசிகர் ஒருவருடன் வீடியோ காலில் பேசிய புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி 66 பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய் ரசிகர் ஒருவருடன் வீடியோ காலில் பேசிய புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகிய பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியாகியது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத அந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தளபதி 66 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஹைதாரபாத் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Super excited to have @prakashraaj sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/vpnl3BmgjA
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022
மேலும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னாள் கதாநாயகன் மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால், அவர் விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷ்யாம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
Delighted to have #Prabhu sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/MAElJd8nRR
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022
இயக்குனர் வம்சி பைடிபல்லி தெலுங்கில் ஏராளமான குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்தவர். இவர் தமிழில் தோழா என்ற படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி, நாகார்ஜூனா இணைந்து நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக தமிழில் அமைந்தது. இதனால், விஜயின் 66வது படமும் குடும்பப்பாங்கான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.