Vijay TV Pugazh Lover: இன்ஸ்டாவில் லவ் பார்ட்னரை அறிமுகம் செய்த குக்வித் கோமாளி புகழ்.. குவியும் வாழ்த்துகள்..!
நடிகர் புகழ் தனது லைஃப் பார்ட்னரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த காமெடி நடிகர் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லைஃப் பார்ட்னரை அறிமுகப்படுத்தியுள்ளார். இது குறித்து புகழ் வெளியிட்ட பதிவில், “ஹேப்பி பர்த்டே பார்ட்னர் லவ் யூ” என்று பதிவிட்டு அத்துடன் அதில் பென்ஸ் ரியாவையும் டேக் செய்திருக்கிறார். புகழின் இந்தப் பதிவின் கீழே அவரின் ரசிகர்கள் பென்ஸ் சியாவிற்கும் புகழுக்கும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
View this post on Instagram
யார் இந்த புகழ்?
இன்றைக்கு புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவரை ஒரு நடிகனாக அடையாளம் கண்டவர் அப்போது கலக்கப்போவது நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த, பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ்.
புகழின் செயல்பாடுகளை கவனித்த அவர் அவரை கலக்கப்போவது சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்க சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலிலேயே எலிமினேட் ஆகிவிட்டார். அதன் பின்னர் கம்பியூட்டர் சர்வீஸ், வாட்டர் வாஷ் என இருந்த புகழுக்கு, சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து சின்ன சின்ன கெட் அப்களில் நடித்த புகழுக்கு கலக்கப்போவது சீசன் 5 இல் லேடி கெட்ட அப் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கெட்ட அப் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து கலக்கப்போவது சீசன் 6 கலந்துகொண்ட புகழ் அங்கும் எலிமினேட் ஆனார்.
அங்கு அவர் எலிமினேட் ஆனாலும், இவர் கலந்து கொண்ட ஷோக்களில் இவர் அடித்த லூட்டிகள் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் கிடைத்த பிரபலம் அவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 பங்கேற்பதற்கான வாய்ப்பை வாங்கிக்கொடுத்தது. சரியான வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த புகழுக்கு, குக் வித் கோமாளி மிகச் சரியான தளமாக அமைந்தது.
ஷோவில் இவர் அடிக்கும் லூட்டிகள், சேட்டைகள், கவுண்டர்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக அவருக்காக ஷோவை பார்க்க ரசிகர் கூட்டம் வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் நடித்துக் கொண்டிருந்த புகழுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வர அதிலிருந்து விலகினார். இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய், சபாபதி வெளியான நிலையில் தற்போது அருண்விஜயின் படம், வலிமை படத்தில் ஒரு ரோல், விஜய் சேதுபதி படம் என படுபிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது அவரின் லைஃப் பார்ட்னரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.