![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
DD Neelakandan : 10 ஆண்டுகளில் நான்காவது அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து டிடி நீலகண்டன் உருக்கம்
முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கடந்த பத்தாண்டுகளில் நான்காவது முறையாக மூட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
![DD Neelakandan : 10 ஆண்டுகளில் நான்காவது அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து டிடி நீலகண்டன் உருக்கம் Vijay TV Host DD Neelakandan shares emotional note after her fourth knee surgery DD Neelakandan : 10 ஆண்டுகளில் நான்காவது அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து டிடி நீலகண்டன் உருக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/11/1b62e6c504990669bbd353238197d64b1726048843685572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிடி நீலகண்டன்
விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் டிடி தொலைக்காட்சியின் மூலமாக பல ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர் டிடி நீலகண்டன். பல்வேறு நட்சத்திரங்களுடன் கலகலப்பாக உரையாடிய இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
rheumatoid arthritis எனப்படும் முடக்குவாதத்தால் பாதிப்புள்ளான காரணத்தினால் டிடி தனது வேலையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க விரைவில் குணமடைந்து வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
10 ஆண்டுகள் நான்கு அறுவை சிகிச்சை
தற்போது டிடி தனது வலது காலில் நான்காவது முறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் . அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். இத்துடன் அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,
“கடந்த மூன்று மாதங்கள் எனக்கு மிகவும் சவாலான ஒரு மாதமாக இருந்துள்ளது. இரண்டு மாதங்கள் முன்பாக என் ஒரு பெரிய அறுவை சிகிச்சை எனக்கு நடந்தது. என்னுடைய மூட்டு எலும்புகளை மொத்தமாக மாற்றியுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் எனது வலது காலில் நடைபெறும் நான்காவது அறுவை சிகிச்சை இது. இதுவே எனது வலது காலில் நான் செய்துகொள்ளும் கடைசி அறுவை சிகிச்சையாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த அறுவை சிகிச்சை மிகவும் வலிமிக்கதாக இருந்தது. ஆனால் நான் கொஞ்சம் கொஞ்சமக குணமடைந்து வருகிறேன். இது நடந்து இரண்டு மாதங்கள் கழித்து நான் இந்த பதிவை போடுவது இத்தனை நாள் என்னை தொலைக்காட்சியில் ரசித்த ரசிகர்களுக்காக .
இவ்வளவு அளவுகடந்த அன்பை என்மீது காட்டும் அளவிற்கு நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கஷ்டமான சூழல்களில் இந்த வலியால் கசப்பான ஒரு மனுஷியாக நான் மாறிவிடாமல் இருக்க என்னைச் சுற்றி இருந்த மனிதர்களே உதவினார்கள். இப்போது என் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை நான் நிச்சயமாக திரும்பி வருவேன்” என அவர் தெரிவித்துள்ளார்
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)