மகாராஜாவாக நடித்து சாதாரண மனிதராக வாழும் விஜய் சேதுபதியின் தற்போதைய சொத்து மதிப்பு!
விஜய் சேதுபதி இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு ரூ.140 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி:
கடின உழைப்பு, நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் தான் விஜய் சேதுபதி. யதார்த்தமான நடிப்பு, கேசுவலான பேச்சு, சிரிச்ச முகம் இப்படியெல்லாம் வச்சு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். இவரோட ஆரம்பகால சினிமாவ திரும்பி பார்த்தால்... அவர் ஒரு குணச்சித்திர நடிகர் கூட கிடையாது. 10 பேருல ஒருத்தரா நடிச்சவருனு தெரியும்.
பான் இந்தியா ஸ்டார்:
அப்படி நடிச்ச விஜய் சேதுபதி தான் இன்று பான் இந்தியா ஸ்டாரா மாறி இருக்கிறார். ஹீரோவாக அறிமுகமான பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியவே ஷார்ட் பீரியடில் 50க்கும் அதிகமான படங்களில் நடித்தார். சேதுபதி, சூதுகவ்வும், நானும் ரௌடி தான், விக்ரம் வேதா, செக்க சிவந்த வானம், ஆண்டவன் கட்டளை, 96, பேட்ட, சூப்பர் டீலக்ஸ், மாஸ்டர், விக்ரம், விடுதலை பார்ட் 1, மகாராஜா, விடுதலை பார்ட் 2 என தன்னுடைய படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
மகாராஜா ரூ.1000 கோடி வசூல்:
தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களில் கனவாக இருக்கும் ரூ.1000 கோடி வசூலை மகாராஜா மூலம்
தனதாக்கி கொண்டவரும் விஜய் சேதுபதி தான். அதே போல் பாலிவுட்டில் இவர் நடித்த ஜவான் படம் ரூ.1100 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதற்கு முன்னதாக பேட்ட மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களிலும் வில்லன் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார். வரும் 19ஆம் தேதியுடன் இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன் பல்வேறு வேலைகளை செய்து வந்த விஜய் சேதுபதி குடும்பத்தை காப்பாற்ற, அதிக வருமானத்துக்காக துபாயிலும் வேலை பார்த்தவர் .
சொத்து மதிப்பு:
அப்படி வேலை பார்க்கும் போது ஆன்லைன் மூலமாக மனைவி ஜெஸ்ஸியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இருவரும் முதல் முறையக நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தான் சந்தித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்களுக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவருடைய சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த ஆண்டு விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு 100 கோடி என கூறப்பட்ட நிலையில், 2025-ல் இவரது சொத்து ரூ.140 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ. 15 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார். இதே போல் ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு ரூ.30 கோடி வீதம் சம்பளம் பெற்று வருகிறார். இவரின் அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுக்கவே இவரின் சம்பளம் 50 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

