Bharathi Kannamma : பாரதி கண்ணம்மாவில் புகையை கிளப்பிய புகைப்படம்... இதுதான் ட்விஸ்ட்டா?
நீண்ட நாட்களாக இந்த சீரியல் முடிவுபெறும் நிலைமைக்கு சென்று, அதில் ஏதாவது ஒரு ட்விஸ்டை கிளப்பி மீண்டும் கண்ணம்மாவின் குழந்தைக்கு அப்பா யாரு என்ற கேள்விக்கு வந்துவிடுகிறது.
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் என்றாலே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல்னா சொல்லவே தேவையில்லை. தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,டிஆர்பிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
நீண்ட நாட்களாக இந்த சீரியல் முடிவுபெறும் நிலைமைக்கு சென்று, அதில் ஏதாவது ஒரு ட்விஸ்டை கிளப்பி மீண்டும் கண்ணம்மாவின்குழந்தைக்கு அப்பா யாரு என்ற கேள்விக்கு வந்துவிடுகிறது. ஒரே ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தா எல்லா கேள்விக்கும் பதில் வந்துரும் என்று நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊத்தி கமெண்ட் செய்தாலும், இதையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த சீரியலின் இயக்குநர் நாளுக்குநாள் ட்விஸ்ட்களை அடுக்கி கொண்டு செல்கிறார்.
முன்னதாக, சீரியலில் கதையின் டிவிட்ஸாக கண்ணம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் காரணம் இல்லை என பாரதி மறுக்கவே கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.
இறுதியில் கண்ணம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் ஒரு குழந்தை மட்டும் தான் கண்ணம்மாவிடம் வளர்வதுப்போன்றும், மற்றொரு குழந்தை மாமியார் சௌந்தர்யாவிடம் வளர்கிறது. ஒருநாள் இதனைத் தெரிந்துகொண்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். எப்பொழுதாவது ஒரு நாள் தன்னை பாரதி ஏற்றுக்கொள்வார் என்ற மனநிலையில் இருந்த கண்ணம்மா, இதனால் பல முறை அசிங்கப்படுகிறார்.
இந்நிலையில் தான் தன்னுடைய பிறந்த நாள் விழாவில் லட்சுமியின் அப்பா யார் என்று சொல்லிவிடுவேன் என்று கண்ணம்மா தெரிவித்தார்.இந்த பிறந்தநாள் விழாவில் பாரதி மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குழந்தை லட்சுமி என் அப்பா யார் என்று அனைவரது மத்தியிலும் கேள்வி எழுப்ப, கண்ணம்மா மற்றும் பாரதியின் குடும்பத்தார் என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
View this post on Instagram
சரி யாராவது பாரதிதான் உன் தந்தை சென்று கூறி இந்த சீரியலுக்கு எண்டுகார்டு வந்துவிடும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், பாரதி உள்புகுந்து "உனக்கு உன் அப்பா யாருன்னு தெரியணும் அதானே,நானே சொல்றேன். இதோ இங்க நிக்கிறாங்களே அவங்க தான் உனக்கு எல்லாமே.உனக்காக தன்னோட வாழ்க்கையையே தியாகம் செஞ்ச உன் அம்மா, அப்பா என்றும் எல்லாமே அவங்கதான்" என்று கூறுகிறார்.
இதைப்பார்த்து ஒருபக்கம் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்க, மறுபக்கம் நெட்டிசன்கள் ஐயோ சாமி முடியல என்று நிஜ கண்ணீர் வடிகின்றனர்.மேலும், எப்பதான்டா இந்த சீரியல்ல முடிப்பீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.அதில், பாரதி,கண்ணம்மா, குழந்தையான ஹேமா ஒரு கண்ணாடி முன்னாடி எடுத்துக்கொண்ட செல்பி தான் இப்ப டாப்மோஸ்ட் ட்ரெண்ட்.
இந்த புகைப்படத்தை பார்த்ததன் மூலம் விரைவில் சீரியல் முடிவுக்கு வருகிறது என்று பலரும் புதிய புகையை தற்போது கிளப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்